சென்னை அணியிலிருந்து வெளியேறும் பிராவோ!

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிவந்த மேற்கிந்திய தீவுகளின் சகலதுறை வீரர் டுவைன் பிராவோ, ஐ.பி.எல். தொடரிலிருந்து முழுமையாக வெளியேறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டுவைன் பிராவோவுக்கு இடுப்பு பகுதியில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக அவர் மீதமுள்ள போட்டிகளில் விளையாடுவதற்கு தயாராக இல்லை என சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

IPLல் இல் புது வரலாறு படைத்தார் தவான்!

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் ஆரம்ப போட்டிகளில் விளையாடாத டுவைன் பிராவோ, சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதன்முதலாக விளையாடினார்.

இதன்பின்னர் பிராவோ இறுதியாக டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினார். இந்தப் போட்டியில் உபாதைக்கு முகங்கொடுத்த இவர், சென்னை சுப்பர் கிங்ஸ் அணி இக்கட்டான நிலையை அடைந்திருந்த போதும், இறுதி ஓவரை வீசுவதற்கு களமிறங்கவில்லை.

இதனால் இந்தப் போட்டியில் வெற்றிபெறுவதற்கு வாய்ப்பிருந்தும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியதுடன், பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

Video – டோனி ஏன் நடராஜனிடம் விக்கெட்டினை கொடுத்தார்? | Cricket Galatta Epi 41

டுவைன் பிராவோவின் விலகல் குறித்து சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரி காசி விஸ்வநாதன் குறிப்பிடுகையில், “இடுப்பு பகுதியில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக டுவைன் பிராவோ அணியிலிருந்து வெளியேறியுள்ளார். அவர் நாளை நாடு திரும்பவுள்ளார். டுவைன் பிராவோவுக்கு பதிலான மாற்று வீரர் தேவையென்றால், நிர்வாகம் தெரிவுசெய்யும்” என்றார்.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணி இம்முறை ஐ.பி.எல். தொடரில் 10 போட்டிகளில் விளையாடி, மூன்று போட்டிகளில் மாத்திரம் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<

The post சென்னை அணியிலிருந்து வெளியேறும் பிராவோ! appeared first on ThePapare.com.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 Views