ரிஷாத் என்ற பெயரை உச்சரிக்காது அரச இயந்திரம் இயங்க முடியாத நிலையில் – முஷாரப்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

பி.சி.ஆர்.பரிசோதனையைக் காரணம் காட்டி ரிஷாத் பதியுதீனின் பாராளுமன்றம் வரும் உரிமை கூட மறுக்கப்பட்டுவிட்டதாக குற்றஞ்சாட்டிய  எதிர்க்கடசி பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப், ரிஷாத் என்ற பெயரை உச்சரிக்காது அரச இயந்திரம் இயங்க முடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழான கட்டளை மீதான விவாதத்தில்   உரையாற்றும் போதே அவர் இவ்வாறுதெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

எமது கட்சியின் தலைவர் ரிஷாத் பதியுதீனின் கைதை ஏதோ சர்வதேச பயங்கரவாதியை பிடித்ததுபோல் சித்திரிக்கின்றனர். ரிஷாத் என்ற பெயரை உச்சரிக்காது அரச இயந்திரம் இயங்கமுடியாத நிலையில் உள்ளது. பாராளுமன்றமும் அரசும் ரிஷாத் என்ற ஒரு பெயரைச் சுற்றியே இயங்குகின்றது. நாட்டுத்தலைவரின் பெயர் உச்சரிக்கப்படுவதனைவிடவும் ரிஷாத் பதியுதீன் என்ற பெயரே அதிகம் உச்சரிக்கப்படுகின்றது. ரிஷாத் ஒரு பாராளுமன்ற உறுப்பினர்.

 அவர் கைதானாலும் பாராளுமன்றம் வருவதற்கான உரிமை உள்ளது. அதற்கான கோரிக்கையையும் அவர் முன்வைத்தார். அதற்கான அனுமதியை சபாநாயகர் வழங்கியபோதும் றிஷாத்துக்கு பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமெனக்கூறி பாராளுமன்றம் வருவதற்கான அவரின் உரிமையும் மறுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். பரிசோதனைகளில் தவறான முடிவுகள் வெளிவருவதனையும்  இங்கு நான் குறிப்பிட விரும்புகின்றேன்  என்றார். 

Source link

The post ரிஷாத் என்ற பெயரை உச்சரிக்காது அரச இயந்திரம் இயங்க முடியாத நிலையில் – முஷாரப் appeared first on Helanews.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

45 Views