மிகக் குறைந்த வயதில் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட சிறுவன்!

20 ஆம் நூற்றாண்டில் மிக குறைந்த வயதில் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட சிறுவன் தான் ஜார்ஜ் .
இக்கொடுரமான தண்டனையை ஜார்ஜ் பெறும் போது அவனது வயது 14 தான்.

ஜார்ஜ் மீது சாட்ட பட்ட குற்றம் 7 வயதான Betty மற்றும் 11 வயதான Marry ஆகிய இரண்டு குழந்தைகளை கொலை செய்தான் என்பதே ஆகும்
இவ்விருவரின் சடலமும் அப்பெற்றோரின் வீட்டுக்கருகில் கைப்பற்ற பட்டது.

ஜார்ஜீக்கு ஹெவி வோல்டேஜ் மின்சாரத்தை உடலில் பாய்ச்சி கொல்ல போகும் கடைசி மணி நேரம் வரை தான் நிரபராதி என்றே சொல்லி கொண்டு அழுத வண்ணம் இருந்தான்.
அவனுடய கரங்களில் அவ்விறுதி தண்டனையை பெற போகும் நேரம் வரை புத்தகத்தை வைத்த வண்ணமிருந்தான்

ஜார்ஜீக்கு தண்டனை அளித்த நீதிபதிகள் அனைவரும் வெள்ளையர்கள்.

ஜார்ஜ் கருப்பினத்து சிறுவன் என்ற காரணத்திலாயே அக்குற்றசாட்டை
அவன் தலை மேல் வைக்க தலைப்பட்டனர் நீதிபதிகள்.

ஜார்ஜீக்கு வழக்கறிஞர் உதவி கிடைக்க வில்லை .கைது செய்யப்பட்டதில் இருந்து மரணதண்டனை அளிக்கும் வரை ஜார்ஜ் தனிமை சிறையில் வைக்கப்பட்டிருந்தான்.

ஜார்ஜீன் பெற்றோர்கள் கடைசி வரை அரசு அலுவலர்களால் மிரட்டப்பட்டனர்.

இறுதியாக ஜார்ஜ் அழைத்து வரப்பட்டு 5350 வோல்ட் அளவு மின்சாரம் பாய்ச்சப்பட்டு கொல்ல படும் வரையில் தான் நிரபராதி
தனக்கு ஏதும் தெரியாது என்று சொல்லி அழுது கொண்டே இருந்தான்

துடிதுடித்து இறந்தான் அச்சிறுவன்.

70 ஆண்டுகளுக்கு பிறகு கரோலினா நீதிமன்றம் ஜார்ஜ் நிரபராதி தான் என்று தீர்ப்பிட்டது ஆக பெரும் தாமதமான நீதி.
இப்படித்தான் இந்த உலகில் தவறிழைத்தவன் எவனோ அவன் தப்பித்துக் கொள்கின்றான். குற்றம் புரியாதவன் மாட்டிக்கொண்டு தண்டனை அனுபவிக்கின்றான். நீதி என்றோ இறந்து விட்டது. இதை புரிந்து உணர்ந்தவர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

23 Views