மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை அறிவிக்க தொலைபேசி – தொலை நகல் இலக்கங்கள்

நாட்டில் மீண்டும் ஏற்பட்டுள்ள கொரோன வைரஸ் அச்ச நிலையை அடுத்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்  கல்முனை பிராந்திய அலுவலகம்  கடந்த வெள்ளிக்கிழமை(16)  முதல் மறு அறிவித்தல் வரும்வரைக்கும் மூடப்பட்டிருப்பதுடன்  ஆணைக்குழுவில் முறைப்பாட்டுகளை அறிவிக்க தொலைபேசி இலக்கம்   தொலை நகல் இலக்கம் அறிமுகம் செய்துள்ளது.

இதற்கமைய  அலுவலகம் மூடப்பட்ட காலப்பகுதியில் மனித உரிமை மீறல் தொடர்பான முறைப்பாடுகளை 1996 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பதிவு செய்யுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்  கல்முனை பிராந்திய இணைப்பாளர்  இஸ்ஸதீன் லத்தீப்  தெரிவித்திருந்த நிலையில்  மனித உரிமை மீறல் தொடர்பாக முறைப்பாடு செய்ய விரும்புகின்றவர்கள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட  தொலை நகல் தொலைபேசி இலக்கங்களின்  மூலம் மேற்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 கொரோனா வைரஸ் தாக்கம் இலங்கையிலும் மீண்டும்  பீடித்துள்ள நிலையில்  அதனை கட்டுப்படுத்த அரசாங்கத்தினால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன்படி அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களில்  சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு    கடந்த தினங்களில்  அரசு அறிவித்திருந்தது.

இதன்படி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்  கல்முனை பிராந்திய அலுவலகமும் தற்போது  மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரையில் மூடப்பட்டுள்ளது.இருப்பினும் 1996 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பொது மக்கள் தமது முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும். மேலும்  பதிவு செய்யப்படும் முறைப்பாடுகள் தொடர்பிலான நடவடிக்கை இலகுபடுத்துவதற்காக புதிய தொலைநகல் 0672229728 எனும்  இலக்கத்தை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 அத்துடன் அவசர மனித உரிமை மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளுக்கு   மகஜர் ஒன்றின் மூலம் சந்திக்க முடியும் என  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் ஏ.எல்.இஸ்ஸடீன் தெரிவித்தார்.கடந்த காலங்களிலும் கொரோனா அனர்த்த நிலைமையினால்  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நற்பிட்டிமுனை பகுதியில் அமைந்துள்ள  கல்முனை பிராந்திய  அலுவலகம் தற்கொலிகமாக மூடப்பட்டு மேற்கண்டவாறு நடவடிக்கை எடுக்கப்ட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தககது. #மனிதஉரிமைகள்ஆணைக்குழு #முறைப்பாடு #தொலைபேசி #அறிமுகம் #கொரோனா

The post மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை அறிவிக்க தொலைபேசி – தொலை நகல் இலக்கங்கள் appeared first on GTN.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

42 Views