பிக்பாஸில் அடுத்த ‘வைல்ட் கார்ட் என்ட்ரி’ இவர் தானாம்..!

உலககெங்கும் கொரோனா அச்சுறுத்தல் இருந்தாலும், மனதிற்கு கொஞ்சம் ஆறுதலாக, தற்போது கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி உள்ளதென்றே கூறலாம். 

அந்த வகையில், தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஒக்டோபர் 4ஆம் திகதி தொடங்கியது. இந்த சீசனில் போட்டியாளர்களாக, ரியோ, சனம் ஷெட்டி, ரேகா, பாலா, அனிதா சம்பத், ஷிவானி, ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல் முருகன், ஆரி அர்ஜுனன், சோம் சேகர், கேப்ரில்லா, அறந்தாங்கி நிஷா, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாடகர் ஆஜித் ஆகிய 16 பேர் கலந்து கொண்டுள்ளனர். இதனிடையே வைல்ட் கார்ட் என்ட்ரியாக தொகுப்பாளினி அர்ச்சனா கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார்.

இந்நிலையில் நிகழ்ச்சி கொஞ்சம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. இதையடுத்து கடந்த வாரம் நடிகை ரேகா எலிமினேட் ஆகி வெளியேறியுள்ளார். இந்த வாரம் நொமினேஷன் லிஸ்டில் ஆரி, ஆஜித், அனிதா சம்பத், பாலா, சுரேஷ் சக்கரவர்த்தி ஆகிய 5 பேரும் உள்ளனர். 

இந்நிலையில், அடுத்த வைல்ட் கார்ட் என்ட்ரியாக பாடகி சுசித்ரா பிக்பாஸ் வீட்டுக்குள் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சீசன்களை காட்டிலும் இந்த சீசன் சுவாரஸ்யம் குறைவாக இருப்பதனால் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலமாக புதிய போட்டியாளர்களை களம் இறக்கி நிகழ்ச்சியை சூடுபிடிக்க வைக்க பிக்பாஸ் குழு முடிவு செய்துள்ளதாகவே தெரியவருகிறது.

Source link

The post பிக்பாஸில் அடுத்த ‘வைல்ட் கார்ட் என்ட்ரி’ இவர் தானாம்..! appeared first on Helanews.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

26 Views