படகுக்கு தீ வைப்பு

file photo

வடமராட்சி- கிழக்கு செம்பியன்பற்று தனிப்பனை கிராமத்தில் கடற்தொழிலாளர் ஒருவரின், படகு வெளியிணைப்பு இயந்திரம் மற்றும் பெறுமதியான வலைகள் விஷமிகளால் தீயிட்டு எரிக்கப்பட்டு உள்ளன.

நேற்று (திங்கட்கிழமை) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் தனிப்பனை கிராமத்தைச் சேர்ந்த தர்மபிரகாசம் உதயதாஸ் என்பவரின் படகே, இவ்வாறு விசமிகளினால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட கடற்தொழிலாளர், பளை காவல்நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார். மேலும்,  யாழ்.மாவட்ட நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளுக்கும் தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து காவல்துறையினா் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். #படகு #தீவைப்பு #வடமராட்சி #கடற்தொழிலாளர்

The post படகுக்கு தீ வைப்பு appeared first on GTN.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

28 Views