நாட்டில் மேலும் 126 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

நாட்டில் மேலும் 126 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

இன்று மட்டும் இதுவரை 186 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 120  பேர்  மினுவாங்கொடை கொவிட்-19 கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.

இதனையடுத்து மினுவாங்கொடை கொத்தணிப் பரவலுடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் 2,342 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் ஜப்பானில்  இருந்து நாடுதிரும்பிய மூவருக்கும், ரஷ்யாவிலிருந்து இருந்து நாடுதிரும்பிய  இரண்டு பேருக்கும் கட்டாரில் இருந்து நாடுதிரும்பிய ஒருவருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

இதனையடுத்து நட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,811 ஆக உயர்வடைந்துள்ளதுடன்  2,341 தொற்றாளர்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள 21 கொரோனா தொற்றுக்கான வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளா 3,457பேர் குணமடைந்தும் 13 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

அதேநேரம் வைரஸ் தொற்று சந்தேகத்தின் பேரில் 297 பேர் வைத்திய கண்காணிப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source link

The post நாட்டில் மேலும் 126 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! appeared first on Helanews.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

31 Views