சிங்கள மக்கள் மத்தியில் எம்மை இனவாதிகளாக காட்டுகின்றனர். – சாணக்கியன் குற்றச்சாட்டு

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

மயிலத்தமடு, மாதவனை பிரசேங்களில் உள்ள மேய்ச்சல் நிலம் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுனருடன் நாம் நடத்தி சந்திப்பு தொடர்பில் ஆளுனர் வெளியிட்டுள்ள கருத்துகள் சிங்கள மக்கள் மத்தியில் எம்மை இனவாதிகளாக காட்டும் வகையில் அமைந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார். 

 வடக்கு கிழக்கிற்கு ஒரு நீதி தெற்கிற்கு இன்னொரு நீதியா- சாணக்கியன் காட்டம்!  | Athavan News

பாராளுமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை சிறப்புரிமை பிரச்சினையொன்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். 

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

மயிலத்தமடு, மாதவனை பிரசேங்களில் உள்ள மேய்ச்சல் நிலம் கிழக்கு மாகாண ஆளுனர் வெளிடப்படவுள்ளதாக கூறும் வர்த்தமானி குறித்து எழுந்துள்ள சிக்கல் நிலைமைகளை கலந்துரையாடுவதற்காக கிழக்கு மாகாண ஆளுனர் அநுராத யாம்பத்தை கடந்த 14ஆம் திகதி காலை 10 மணியளவில் சந்தித்திருந்தோம். இந்தச் சந்திப்பு தொடர்பில் ஆளுனர் ஊடங்களுக்கு விடுத்து அறிவிப்பில், பாராளுமன்ற உறுப்பினர் சானக்கியன் இனங்கள் அடிப்படையில் இங்குள்ள மேய்ச்சல் நிலங்களை பிரித்துக்கொடுக்குமாறு அழுத்தம் கொடுத்ததாகவும் இனங்கள் அடிப்படையில் காணிகளை ஒதுக்கீடு செய்வது எமது பணியல்ல எனவும் கூறியுள்ளார். இந்த செய்தி பல ஊடகங்களில் வெளியாகியுள்ளது. இந்த செய்தி எனது சிறப்புரிமையை மீறும் வகையில் அமைந்துள்ளது. ஆளுனருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்க வேண்டும்.

மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலகத்திற்கு உரித்தான மயிலத்தமடு, மாதவனை பிரசேங்களில் மகாவலி பி பிரிவில் சில காணிகள் உள்ளன. இதில் 2 இலட்சம் பசு மாடுகள் மேய்க்கப்படுகின்றன. தினமும் 17ஆயிரம் லீட்டர் பால் உற்பத்தி இங்கு நடைபெறுகிறது. கிராம சேவகர், பிரதேச செயலாளர், அரசாங்க அதிபர் ஆகியோரை சந்தித்தோம். இந்த பிரச்சினை தொடர்பில் பேசியதால் அரசாங்க அதிபரையும் மாற்றியுள்ளனர். மகாவலி திட்டத்திற்குப் பொறுப்பான பணிப்பாளரையும் சந்திதோம். அமைச்சர் சமால் ராஜபக்ஷவிடமும் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளோம்.

20ஆயிரம் ஏக்கர் நிலத்தை வர்த்தமானியில் பிரசுரித்து ஐந்து ஐந்து ஏக்கர் மாடு மேய்ச்சலுக்காக பிரித்துக்கொடுக்கவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் கூறியுள்ளார். ஐந்து ஏக்கர் என்ற அடிப்படையில் பிரித்துக்கொடுப்பதால் அவை மேயும் மாடுகளுக்குத் தெரியுமா?. எனது சிறப்புரிமை தொடர்பில் பொய்களை கூறுகின்றனர். நான் பாராளுமன்றத்தில் சிங்கள மொழியிலும் உரையாற்றி இனவாதி என்பதை உணர்த்தியுள்ளேன். சிங்கள மக்களுக்கு தவறான செய்திகள் செல்லக்கூடும். குறிப்பாக தமிழ் எம்.பிகள் இனங்கள் அடிப்படையில் காணிகளை பிரித்துக்கொடுக்குமாறு கூறுவதாக செய்திகள் செல்லக்கூடும் என்றார்.

Source link

The post சிங்கள மக்கள் மத்தியில் எம்மை இனவாதிகளாக காட்டுகின்றனர். – சாணக்கியன் குற்றச்சாட்டு appeared first on Helanews.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

28 Views