இலங்கை மக்களுக்கு பேரதிர்ச்சி தரும் செய்தி..இலங்கை ஆய்வக சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை.! சமூகப் பரவலானது கொரோனா.?

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை அடையாளம் காணுவதற்காக மேற்கொள்ளப்படும் PCR பரிசோரனை முற்றிலும் போலியானதென இலங்கை ஆய்வக சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
PCR பரிசோதனை மாபியா ஒன்று உள்ளதாகவும் அதற்கு சுகாதார அமைச்சும் தொடர்பு என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.தனியார் பிரிவு மற்றும் பல்கலைக்கழகங்களினால் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் சரியானதென ஏற்றுக் கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.இதுவரையில் இந்த பரிசோதனை ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு வகையில் மேற்கொள்ளப்படுகிறதே தவிர கொள்கைக்கமைய மேற்கொள்ளப்படவில்லை அவர் கூறியுள்ளார்.தற்போது நோய் பரவல் தீவிரமடைந்துள்ளதாகவும் எந்தளவு கொரோனா தொற்றாளர்கள் சமூகத்தில் உள்ளார் எனத் தெரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.கொரோனா வைரஸ் தற்போது சமூகத்திற்குள் பரவியுள்ளது. அரசாங்கத்தினால் கூறுவது போலியான விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

39 Views