இப்படியும் நடக்கிறது.. குடும்பச் சண்டையால் 7 வயதுச் சிறுவன் மீது பட்டாசு கொழுத்திப் போட்ட கடை முதலாளி!!

இரத்தினபுரி – நிவித்திகல பிரசேத்தில் ஏழு வயது சிறுவன் ஒருவரின் உடலில் பட்டாசு கொழுத்திய நபரை பொலிஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.இரு குடும்பத்தினருக்கிடையில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக கடை முதலாளி ஒருவர் பலி தீர்க்கும் வகையில் ஏழு வயது சிறுவனின் உடலில் பட்டாசு கொழுத்தி போட்டதில் சிறுவனின் முகம் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நிவித்திகல பொலிஸார் தெரிவித்தனர்.இதில், காயமடைந்த சிறுவன் நிவித்திகலை பிங்கந்த தோட்ட பிரிவை சேர்ந்த தமிழ் பாடசாலை ஒன்றில் தரம் இரண்டில் கல்வி கற்று வருகின்றார்.குறித்த சிறுவனின் தாய் வேலைக்கு சென்றதாகவும் தந்தை கொழும்புக்கு சென்றதாகவும் தெரிவிக்கப்படுவதோடு, சிறுவன் சந்தேகநபரின் கடை முன் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது கடை முதலாளி சிறுவன் மீது பட்டாசு கொழுத்தி போட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.மேற்படி சம்பவம் குறித்து பொலிசார் மேலதிக விசாரணைகளை நடாத்தி வருவதோடு தலைமறைவாகி உள்ள சந்தேகநபரை தேடி பொலிசார் வலை விரித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

33 Views