800 படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகினாரா?

Published by T. Saranya on 2020-10-19 16:19:29

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படமான 800 திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என்று குரல்கள் எழுந்த நிலையில், முத்தையா முரளிதரன், 800 படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

விஜய் சேதுபதியின் கலைப்பயணத்தில் தடைகள் ஏற்பட்டுவிடக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் முத்தையா முரளிதரன் வெளியிட்ட அறிக்கையை வெளியிட்டு நன்றி வணக்கம் என தெரிவித்துள்ளார். இது 800 படத்தில் இருந்து  விஜய் சேதுபதி  விலகியதை காட்டுவதாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

800 படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனாக நடிப்பது குறித்து ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும் பலராலும் கருத்து தெரிவித்து வந்த நிலையில் தற்போது படத்திலிருந்து அவர் விலகியதாக தெரிவிக்கப்படுகிறது.

Source link

The post 800 படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகினாரா? appeared first on Helanews.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

42 Views