800′ திரைப்பட எதிர்ப்பாளர்களை சாடிய ராதிகா

 

800′ படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்று தெரிவிப்பவர்களைக் கடுமையாகச் சாடியுள்ளார் ராதிகா சரத்குமார்.

முத்தையா முரளிதரன் பயோபிக்கில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவர் 800 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்திருப்பதால், முத்தையா முரளிதரன் பயோபிக் கதைக்கு ‘800’ எனத் தலைப்பிட்டுள்ளனர் படக்குழுவினர் .

முத்தையா முரளிதரன் பயோபிக்கில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என எதிர்ப்பு உருவாகியுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள், இலங்கைத் தமிழர்கள், இயக்குநர் பாரதிராஜா, சீனு ராமசாமி, சேரன் உள்ளிட்ட பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதனிடையே ‘800’ படத்துக்கு எதிர்ப்பு உருவாகியுள்ளதை கடும் காட்டமாக விமர்சித்துள்ளார் ராதிகா சரத்குமார். இது தொடர்பாக  தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் :

“முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றில் விஜய் சேதுபதியை நடிக்க வேண்டாம் என்று சிலர் கூறுகின்றனர். இவர்களுக்கு வேறு வேலை இல்லையா. அரசியல் பின்புலம் கொண்ட ஒரு தமிழரின் சன்ரைசர்ஸ் அணியில் தலைமை பயிற்சியாளராக அவர் எப்படி இருக்கிறார் என்று அந்த அணியைக் கேட்கலாமே. விஜய் சேதுபதி ஒரு நடிகர், ஒரு நடிகனுக்கு கட்டுப்பாடுகளை விதிக்காதீர்கள். விஜய் சேதுபதி மற்றும் கிரிக்கெட் இரண்டிலும் முட்டாள்தனங்களைத் திணிக்காதீர்கள்”

இவ்வாறு ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.

The post 800′ திரைப்பட எதிர்ப்பாளர்களை சாடிய ராதிகா appeared first on Swaasam.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

35 Views