1,300 கிலோ மீட்டர் தூரம் வந்த தற்கொலை செய்த வாலிபரின் தலை

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் பேதுலை சேர்ந்த ரவி மார்க்ரம்(வயது 28) என்பவர் குடும்ப தகராறு காரணமாக கடந்த 2ம் திகதி பேதுல் பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

ரவியின் உடல் பாகங்கள் தண்டவாளத்தின் அருகே சிதறி கிடந்ததுடன், இதுபற்றி அறிந்த பேதுல் காவல்துறையினர் ரவியின் உடல் பாகங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் ரவியின் தலை மட்டும் கிடைக்கவில்லை. அவரது தலையை பேதுலில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரம் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் காவல்துறையினர் தேடிப்பார்த்தனர். ஆனால் தலை கிடைக்கவில்லை.

இந்த நிலையில் டெல்லியில் இருந்து பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்திற்கு வந்த ராஜஸ்தானி ரெயில் என்ஜினில் குறித்த தலை சிக்கி இருந்தமை தெரியவந்தது .

இதையடுத்து ரவியின் தலையை பெங்களூரு வந்து பெற்று செல்லும்படி அவரது குடும்பத்தினரிடம், பெங்களூரு ரெயில்வே காவல்துறையினர் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் பொருளாதார சூழ்நிலையை காரணம் காட்டி தங்களால் பெங்களூருக்கு வர முடியாது என்று கூறினர். இதையடுத்து ரவியின் தலையை ரெயில்வே காவல்துறையினர் அடக்கம் செய்ததுள்ளனர்.

இதேவேளை ரவி, ரெயில் முன்பு பாய்ந்த பேதுலில் இருந்து பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்திற்கு வர 1,300 கிலோ மீட்டர் தூரம் ஆகும். இதனால் ரவியின் தலை, என்ஜினில் சிக்கி 1,300 கிலோ மீட்டர் தூரம் பெங்களூருக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

The post 1,300 கிலோ மீட்டர் தூரம் வந்த தற்கொலை செய்த வாலிபரின் தலை appeared first on Swaasam.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

33 Views