12.10.2020 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

12.10.2020 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் பின்வருமாறு:

அரசாங்க தகவல் திணைக்களத்தின் Publicity பிரிவினால் சிங்கள மொழியில் இருந்து தமிழ் மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டது.

01) 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள 73 ஆவது சுதந்திரதின நிகழ்வு

2021 பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி நடைபெறவுள்ள 73 ஆவது சுதந்திர நிகழ்வு ஏற்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளுக்காக கீழ்க்காணும் அமைச்சர்கள் அடங்கிய உபகுழுவை உருவாக்குவதற்கு நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் உள்ளகப் பாதுகாப்பு உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

கௌரவ மஹிந்த ராஜபக்ஷ
பிரதமர் (தலைவர்)

கௌரவ (பேராசிரியர்) ஜீ.எல். பீரிஸ்
கல்வி அமைச்சர்

கௌரவ தினேஷ் குணவர்த்தன
வெளிவிவகார அமைச்சர்

கௌரவ ஜனக பண்டார தென்னக்கோன்
அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்

கௌரவ கெஹெலிய ரம்புக்வல்ல
வெகுசன ஊடக அமைச்சர்

கௌரவ சமல் ராஜபக்ஷ
நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் உள்ளகப் பாதுகாப்பு உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர்

கௌரவ டளஸ் அழகப்பெரும
மின்சக்தி அமைச்சர்

கௌரவ வாசுதேவ நாணயக்கார
நீர் வழங்கல் அமைச்சர்

02) அதிவேக நெடுஞ்சாலைகள் முதலீட்டுக் கம்பனியை நிறுவுதல்

பொருளாதார அபிவிருத்தி மூலோபாயங்களின் முக்கிய பகுதியாக ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட வீதித் தொகுதிகள் இருத்தல் அவசியமென ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைப் பிரகடனத்தின் மூலம் அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்கமைய 100,000 கிலோமீற்றர் கிராமிய வீதிகள் புனரமைப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடன், மத்திய அதிவேக நெடுஞ்சாலை பணிகள் பூர்த்தி செய்தல், ருவன்புர அதிவேக நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் ஆரம்பித்தல் மற்றும் களனி தொடக்கம் அத்துறுகிரிய வரையான தூண்கள் மூலம் அமைக்கப்படும் அதிவேகப் பாதை அமைக்கும் பணிகளைப் பூர்த்தி செய்தல் போன்ற நடவடிக்கைகள் அரசாங்கத்தால் முன்னுரிமைப்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது அமைக்கப்பட்டு வருவதும், எதிர்காலத்தில் அமைப்பதற்கும் எதிர்பார்க்கும் அதிவேக நெடுஞ்சாலை முதலீடுகளுக்காக மொத்தத் தேசிய உற்பத்தியின் 0.5% – 1.0% விழுக்காடு அரச வரவு செலவு திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட வேண்டுமென்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிவேக நெடுஞ்சாலையைப் பயன்படுத்துபவர்களிடம் அறவிடும் கட்டண வருமானத்திலும், அதிவேக நெடுஞ்சாலையுடன் தொடர்புடைய வேறு வருமான வழிகளிலும் வருமானம் ஈட்டும் வகையில் அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிப்பதற்குத் தேவையான நிதி, குறித்த கம்பனியால் திரட்டுவதற்கு ஏற்ற வகையில் அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளையும் ஒரு கம்பனியின் கீழ்க் கொண்டு வந்து திறைசேரி செயலாளரால் தனியுரிமை பேணக்கூடிய வகையில் நிதி அமைச்சர் கௌரவ பிரதமர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

03) வித்தியலங்கார சர்வதேச பௌத்த மாநாட்டு மண்டபத்தை சேவை வழங்கும் நிலைமைக்குக் கொண்டு வரல்

வித்தியலங்கார சர்வதேச பௌத்த மாநாட்டு மண்டப நிர்மாணிப்புக்காக அரசாங்கத்தால் 1,200 மில்லியன் ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளதுடன், குறித்த முதலீட்டின் அளவும், குறித்த மாநாட்டு மண்டபத்தில் பொருத்தப்பட்டுள்ள அதி நவீன தொழில்நுட்ப உபகரணங்களைச் சரியான வகையில் பராமரிப்பதற்கும் பொறுப்புச் சபையொன்றை நிறுவுவதற்கு 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய தயாரிக்கப்பட்டுள்ள பொறுப்பு உறுதிப் பத்திரத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளதுடன், குறித்த பொறுப்பு உறுதிப் பத்திரத்தின் முதலாம் தரப்பினராக அரசாங்க தரப்பில் புத்தசாசன அமைச்சின் செயலாளர் அவர்கள் கையொப்பமிடுவதாக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

04) கொழும்பு நகரத்திலும் ஏனைய தெரிவு செய்யப்பட்ட நகரங்களிலும் பல்மாடி வாகனத் தரிப்பிடம் அமைத்தல் மூலம் கலப்பு அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்தல்

நாளாந்தம் கொழும்பு நகரத்திற்கும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களுக்கும் வருகை தரும் வாகனங்களில் வீதியின் இரு மருங்கிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக திறந்த போட்டி விலைமனுக் கோரல் செயன்முறையைப் பின்பற்றி தெரிவு செய்யப்பட்ட முதலீட்டாளர்கள் மூலம் வாகனத் தரிப்பிடங்களை அமைத்து பராமரிப்பதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கீழ்காணும் பொறிமுறைகள் (02) இரண்டின் கீழ், இக்கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

• அரச – தனியார் பங்குடமை கருத்திட்டமாக கொழும்பு நகரத்திலும் பத்தரமுல்ல, அநுராதபுரம் மற்றும் கண்டி போன்ற நகரங்களின் 08 இடங்களில் பொதுவான முறையிலான பல்மாடி வாகனத் தரிப்பிடம் மற்றும் இயந்திர வாகனத் தரிப்பிடம் அமைப்பதற்காக தனியார் துறையினரின் யோசனைத் திட்டங்களைப் பெறல்.

• கருத்திட்டத்திற்காக செலவாகும் நிதி கருத்திட்டத்தின் மூலம் முற்கூட்டிய விற்பனையின் அடிப்படையில் திரட்டிக் கொள்ளும் வகையில் வீட்டு அலகுககள், அலுவலக இடவசதிகள் உள்ளிட்ட வேறு பொருத்தமான கருத்திட்டங்களுடன் நாராஹேன்பிட்டி, புறக்கோட்டை ரெலிகொம் வாகனத் தரிப்பிடம், கொழும்பு 7 ஒடஸ் விளையாட்டுக் கழகத்தில் அமைந்துள்ள வாகனத் தரிப்பிடம், கொழும்பு 07 கிங்ஸி அவினியூ போன்ற இடங்களில் பொதுவான முறையிலான பல்மாடி வாகனத் தரிப்பிடம் மற்றும் இயந்திர வாகனத் தரிப்பிடம் அமைப்பதற்காக தனியார் துறையினரின் யோசனைத் திட்டங்களைப் பெறல்.

05) ஊவா வெல்லஸ்;ஸ பல்கலைக்கழகத்திற்கு காணித்துண்டொன்று வழங்கல்

சமகாலத்தில் உயர்கல்விக்கு அதிகரித்திருக்கும் கேள்விக்கமைய அதிக மாணவர்களை அரச பல்கலைக் கழகங்களில் இணைத்துக்கொள்வதற்கான வாய்ப்புக்களை அதிகரிக்கும் அரசாங்கத்தின் கொள்கையை நடைமுறைப்படுத்தும் வகையில், அரச பல்கலைக் கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியமாகும். கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனையைக் கருத்திற் கொண்டு, ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பட்டப்படிப்புக் கற்கைநெறிகளுக்கு மேலதிகமாக மிகவும் பொருத்தமான பட்டப்படிப்புக் கற்கை நெறிகளை ஆரம்பிப்பதற்காக பதுளை மாவட்டச் செயலகத்திற்குட்பட்ட பதுளை கழுகல்பிட்டி கிராமத்திலுள்ள காணியின் 02 ஏக்கர் காணியை பல்கலைக் கழகத்திற்கு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

06) புகையிரதத் திணைக்களத்திற்குரிய புகையிரத வனப் பாதுகாப்பு பிரதேசங்களில் வசிக்கும் புகையிரதப் பணியாளர்கள் தொடர்பாக நடவடிக்கையெடுத்தல்

புகையிரதத் திணைக்களத்திற்கு சொந்தமான 14,000 ஏக்கர் வனப்பாதுகாப்புப் பிரதேசக் காணிகள் இருப்பதுடன், அதில் 10%விழுக்காடு அளவிலான காணிகள் பல தரப்பினருக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய காணியின் 80% விழுக்காடு பல தரப்பினரால் சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்பட்டு வருவதுடன், அவர்களில் புகையிரத திணைக்கள ஊழியர்களும் திணைக்களத்தின் ஓய்வு பெற்ற உத்தியோகத்தர்களும் உள்ளனர். வீடமைப்பு மற்றும் வர்த்தக நிலையங்களை அமைத்தும், விவசாய நடவடிக்கைகளுக்காகவும் குறித்த காணிகளைச் சட்ட விரோதமாகப் பயன்படுத்துகின்றனர். சட்டவிரோதமாக குறித்த காணிகளைக் கையகப்படுத்தியுள்ள சில புகையிரத திணைக்கள ஊழியர்களை நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் அகற்றியுள்ளதுடன், ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு ஓய்வூதியமும் இழக்கப்பட்ட சந்தர்ப்பங்களும் உள்ளன. குறித்த விடயங்களை ஆராய்ந்து அமைச்சரவைக்கு பரிந்துரை செய்வதற்காக கீழ்க்காணும் வகையில் அமைச்சர்கள் அடங்கிய குழுவொன்றை நியமிப்பதற்கு போக்குவரத்து அமைச்சர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனை அமைச்சரவையால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கௌரவ காமிணி லொக்குகே
போக்குவரத்து அமைச்சர் (தலைவர்)

கௌரவ ஜனக பண்டார தென்னக்கோன்
அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்

கௌரவ எஸ்.எம். சந்திரசேன
காணி அமைச்சர்

கௌரவ அஜித் நிவாட் கப்ரால்
நிதி மற்றும் மூலதன சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர்

07) 2003 ஆம் ஆண்டு 36 ஆம் இலக்க புலமைச் சொத்துச் சட்டம் திருத்தம் செய்தல்
உலகளாவிய சுட்டெண்களுக்கமைய மேம்படுத்தக் கூடிய உள்ளூர் உற்பத்திகள் அதிகளவில் இருப்பதுடன், உள்ளூர் மற்றும் சர்வதேச வர்த்தக சந்தையில் காணப்படும் போலி உற்பத்திகளால் அவ்வாறான உற்பத்திகளுக்கு பாரிய போட்டித்தன்மையை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது. அதனால், அவ்வாறான உற்பத்திகள் உலகளாவிய சுட்டெண்களுக்கமைய இலங்கையில் பதிவு செய்யப்படுவது உகந்ததென கண்டறிப்பட்டுள்ளது. அதற்கமைய, இலங்கையில் உலகளாவிய சுட்டெண்களுக்கமைய பதிவு செய்வதற்காக பரந்துபட்டதும் திட்டவட்டதுமான கட்டமைப்பை நிறுவுவதற்காக 2003 ஆம் ஆண்டு 36 ஆம் இலக்க புலமைச் சொத்துச் சட்டத்தை திருத்தியமைப்பதற்கான சட்ட மூலத்தைத் தயாரிப்பதற்காக சட்ட மூல ஆக்குனர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக வர்த்தக அமைச்சர் சமர்ப்பித்த யோசனை அமைச்சரவையால் அங்கீகர்க்கப்பட்டுள்ளது.

08) பாகிஸ்தான் – இலங்கை வர்த்தக உடன்படிக்கையின் கீழ் பாஸ்மதி அரிசி இறக்குமதி செய்தல்

பாகிஸ்தான் – இலங்கை வர்த்தக உடன்படிக்கையின் சரத்துக்களுக்கமைய இறக்குமதி வரிச் சலுகையின் கீழ் 6,000 மெட்ரிக் டொன் பாஸ்மதி அரிசி இறக்குமதி செய்ய முடியும். கடந்த காலத்தில் பாஸ்மதி அரிசி இறக்குமதிக்காக தனியார் துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், குறித்த வகைக்குரிய அரிசியை இறக்குமதி செய்வதில் பல்வேறு மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. குறித்த விடயத்தைக் கருத்தில் கொண்டு, இலங்கை அரச வர்த்தக் கூட்டுத்தாபனம் மற்றும் கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனம் ஃ லங்கா சதொச போன்ற நிறுவனங்கள் மட்டும் குறித்த ஏற்பாடுகளுக்மைய பாஸ்மதி அரிசி இறக்குமதியை மேற்கொள்வதற்கு வர்த்தக அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

09) பாரிய கொழும்பு நீர் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவ மேம்பாட்டிற்கான முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் – படிமுறை 3

பாரிய கொழும்பு நீர் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவ மேம்பாட்டிற்கான முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கொழும்பு நகரின் வடகீழ் மற்றும் தென்மேல் பிரதேசங்களில் நீர்வழங்கல் தொகுதியை மறுசீரமைத்தல், விரிவாக்கல் மற்றும் கட்டணமின்றி வழங்கும் நீர் வழங்கலை மட்டுப்படுத்தல், கொழும்பு நகரின் தெற்கு நீரேந்தும் பிரதேசங்களில் கழிவுநீர் முகாமைத்துவத் தொகுதி மறுசீரமைக்கப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன் கீழுள்ள கருத்திட்டம் 2012 தொடக்கம் 2022 ஒக்டோபர் 24 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்ச்சித்திட்டத்தின் – படிமுறை 3 இன் கீழ் கடன் வசதிகள் 02 கிடைப்பதுடன், அதற்கமைய கீழ்க்காணும் கருத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.

• கிருலப்பன நீரேந்துப் பிரதேசத்திற்கான புதிய கழிவுநீர் ஈர்ப்புக் குழாய்கள், அமுக்கக் குழாய்கள் மற்றும் நீர்ப்பம்பிகள் பெற்றுக்கொடுத்தல்

• வெல்லவத்தை கழிவுநீர் சுத்திகரிப்பு முகாமைத்துவ நிலையத்தை நிர்மாணித்தல்

• கொழும்பு நகரின் வடகீழ் மற்றும் தென்மேல் பிரதேசங்களில் நீர்வழங்கல் தொகுதியை மறுசீரமைத்தல், விரிவாக்கல் மற்றும் கட்டணமின்றி வழங்கும் நீர் வழங்கலை மட்டுப்படுத்தல்

• கொழும்பு மாநகர சபையின் கருத்திட்ட முகாமைத்துவ அலகிற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் வாகனங்கள் மற்றும் அலுவலக உபகரணங்களுக்கான விலைமனுக் கோரல் மற்றும் பயிற்சி செயலமர்வுகளை நடாத்துதல்

இக்கருத்திட்டத்தின் படிமுறை 03 இற்கான கடன்வசதி 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி பூர்த்தியடைய இருப்பதால், குறித்த கடன் வசதியை 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் 24 ஆம் திகதி வரை நீடிப்பதற்காக அரச சேவைகள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

10) ஊதுபத்தித் தயாரிப்புக்களுக்கான மூலப்பொருட்களாகப் பயன்படுத்தப்படும் விசேட மூங்கில் குச்சிகள் வழங்கல் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைக்குத் தீர்வு காணல்

ஊதுபத்தித் தயாரிப்புக்களுக்கான மூலப்பொருட்களாகப் பயன்படுத்தப்படும் விசேட மூங்கில் குச்சிகள் வழங்கல் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக, கீழ்க்காணும் நடவடிக்கைகளுக்காக கைத்தொழில் அமைச்சர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

• ஊதுபத்தித் தயாரிப்புக்களுக்கான மூலப்பொருட்களாகப் பயன்படுத்தப்படும் விசேட மூங்கில் குச்சிகள் தரத்துடன் கூடியதும் தேவையானளவு உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் வரை உற்பத்திக்குத் தேவையான விசேட மூங்கில் குச்சிகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்தல்

• அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் மூங்கில் குச்சிகளுக்கு வரிச்சலுகை வழங்கல்

• இவ்விசேட மூங்கில் தாவரம் (கல் மூங்கில் – Bambusa aspera) இருக்கும் பிரதேசங்களை அடையாளங் காணல் மற்றும் குறித்த மூங்கில் தாவரத்தை வளர்க்கக் கூடிய இடங்களை இனங்கண்டு வளர்த்தல், வனப்பாதுகாப்புத் திணைக்களம், கமநல அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் மகாவலி அதிகாரசபையால் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்

11) பெவசிசுமெப் ஊசிமருந்து100mg/4ml வயல்ஸ் 11,250 இனைப் பெற்றுக்கொள்வதற்கான விலைமனுக் கோரல்

சில புற்றுநோய்களுக்கான சிகிச்சைகளுக்காக பயன்படுத்தப்படும் பெவசிசுமெப் ஊசிமருந்துக்கான விலைமனுக் கோரலுக்காக சர்வதேச போட்டி முறிகள் கோரப்பட்டுள்ளது. பெறுகை ஆட்சேபனைச் சபையின் பரிந்துரைக்கமைய பெவசிசுமெப் ஊசிமருந்து 100mg/4ml வயல்ஸ் 11,250 இனைப் பெற்றுக்கொள்வதற்கான பெறுகைக் கோரல் M/s Medmart Pharma (Pvt) Ltd இற்கு மொத்தச் செலவு 196.88 மில்லியன் ரூபாய்களுக்கு வழங்குவதற்கு சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

12) 20 மில்லிலீற்றர்(20ml) திரவ வயல்ஸ் உடன் ட்ரஸ்டுசுமெப் ஊசிமருந்து 440 மில்லிகிராம் (440 mg) வயல்ஸ் 6,875 பெற்றுக்கொள்வதற்கான விலைமனுக் கோரல்

சில புற்றுநோய்களுக்கான சிகிச்சைகளுக்காக பயன்படுத்தப்படும் ட்ரஸ்டுசுமெப் ஊசிமருந்துக்கான விலைமனுக் கோரலுக்காக சர்வதேச போட்டி முறிகள் கோரப்பட்டுள்ளது. அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தப் பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய 20 மில்லிலீற்றர் (20ml) திரவ வயல்ஸ் உடன் ட்ரஸ்டுசுமெப் ஊசிமருந்து 440 மில்லிகிராம் (440 mg) வயல்ஸ் 6,875 பெற்றுக்கொள்வதற்கான விலைமனுக் கோரல் துருக்கி M/s Transfamra Dis Ticaret Anonim Sirketi  இற்கு மொத்தச் செலவு மற்றும் பொதியனுப்பல் செலவுடன் 1.62 யூரோ மில்லியன்களுக்கு வழங்குவதற்காக வழங்குவதற்கு சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

13) பாரிய கொழும்பு நீர் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவ அபிவிருத்தி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் – படிமுறை 3 – வெல்லவத்த கழிவுநீர் சுத்திகரிப்பு இயத்திரத்தொகுதித் திட்டமிடல், நிர்மாணித்தல் மற்றும் நடைமுறைப்படுத்தல்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் பாரிய கொழும்பு நீர் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவ அபிவிருத்தி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் – படிமுறை 3 – வெல்லவத்த கழிவுநீர் சுத்திகரிப்பு இயத்திரத்தொகுதித் திட்டமிடல், நிர்மாணித்தல் மற்றும் நடைமுறைப்படுத்துவதற்கான விலைமனுக் கோரலுக்காக தகுதிவாய்ந்த நிறுவனங்களிடம் சர்வதேச போட்டி முறிகள் கோரப்பட்டுள்ளது. அதற்கமைய அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தப் பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய குறித்த ஒப்பந்தம் Joint Venture of Power China Zhongnan Engineering Cooperation Ltd with Beijing Water Group Ltdஇற்கு 20.96 அமெரிக்கன் டொலர்களுக்கு இலங்கை ரூபாய் 4.36 மில்லின் (VAT இன்றி) தொகைக்கு வழங்குவதற்காக அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

14) அபிவிருத்தி நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்காக கட்டமைப்புக்கள் மற்றும் செயன்முறைகளை இலகுபடுத்தல்

அபிவிருத்தி நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதில் நிலவும் சில தடைகளாகக் கீழ்வரும் காரணிகள் அடையாளங் காணப்பட்டுள்ளன.
• கொள்கை ரீதியான விடயங்கள் அல்லது ஒழுங்குபடுத்தல் தேவைகள் தவிர்ந்த ஏனைய பொதுவான விடயங்களுக்காக ஒரு சில நிறுவனங்களும் இறுதியில் அமைச்சரவை அங்கீகாரம் அமைச்சுக்களால் பெறவேண்டியிருத்தல்

• தனியார் ஒப்பந்தக்காரர்களுக்கு செலுத்த வேண்டிய கொடுப்பனவுகள் தாமதமாவதால் அபிவிருத்திப் பணிகள் தாமதப்படுவதால் கருத்திட்டச் செலவு அதிகரித்தல்

அதற்கமைய, குறித்த தாமதங்களை இயன்றவரை குறைத்துக் கொள்ளும் வகையில் கீழ்வரும் வகைகளில் இடம்பெறும் அபிவிருத்தி நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமுகமாக நிதி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
• அபிவிருத்திக் கருத்திட்டங்களுக்குரிய திறைசேரியின் செயலாளர் மற்றும் ஏனைய குறித்த அதிகாரிகளின் அங்கீகாரத்தின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தக் கூடிய பணிகளை பூர்த்தி செய்து குறித்த நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை 03 மாதத்திற்கொருமுறை அமைச்சரவைக்கு சமர்ப்பித்தல்
• ஒப்பந்தக்காரர்களால் பூர்த்தி செய்யப்பட்ட வேலைகளுக்காக தாமதமின்றி கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் வகையில் அவர்களுடைய வங்கியில் திறைசேரிப் பிணை வழங்கி அல்லது வசதி வழங்கும் கடிதத்தை வழங்குவதன் மூலம் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ள அபிவிருத்திப் பணிகளுக்காக தொடர்ச்சியான நிதிப் பாய்ச்சலைத் தயாரித்து வழங்குவதை உறுதிப்படுத்துவதற்கான புதிய பொறிமுறையைத் தயாரித்தல்

15) எதிரிசிங்க ட்ரஸ்ட் இன்வெஸ்ட்மென்ட் லிமிடட் கம்பனி தொடர்பாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமறைப்படுத்தல்

எதிரிசிங்க ட்ரஸ்ட் இன்வெஸ்ட்மென்ட் லிமிடட் கம்பனியால் இடம்பெற்றதாகக் கூறப்படும் தவறான நடவடிக்கைகள், மோசடிகள், சட்டவிரோதச் செயல்கள், விசாரணை செய்வதற்கும் பரிசீலனை செய்வதற்கும் அறிக்கைப்படுத்துவதற்குமாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி திரு.கே.ரீ. சித்ரசிறி அவர்களின் தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களால் 2020.01.09 அன்று நியமிக்கப்பட்டது. அதன் கண்காணிப்புக்கள் மற்றும் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை 2020.10.06 மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் கண்காணிப்புக்கள் மற்றும் பரிந்துரைகள் மூலம் கம்பனிச் சட்டம், நிதிக் கம்பனிகள் தொடர்பான சட்டம், நிதி மோசடிச் சட்டம், நிதியறிக்கை வெளியிடும் சட்டம், காணி வெளிநாட்டவர்களுக்கு ஒப்படைத்தல் போன்ற சட்ட ரீதியான வரையறைகளைப் போலவே தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் பல குற்றங்கள் இடம்பெற்றுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேபோல் நிதிக் கம்பனிகளின் கண்காணிப்பு மற்றும் ஒழுங்குபடுத்தல்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் வங்கிகள் தவிர்ந்த நிதி நிறுவனங்களின் கண்காணிப்புத் திணைக்களம் முழுமையாக மறுசீரமைக்கப்பட வேண்டிய தேவை இருப்பதாக விசாரணை ஆணைக்குழு அறிக்கை மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த விடயங்கள் தொடர்பாக அமைச்சரவையின் கவனம் செலுத்தப்பட்டு மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைகள் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

• எதிரிசிங்க ட்ரஸ்ட் இன்வெஸ்ட்மென்ட் லிமிடட் கம்பனியால் மேற்கொள்ளப்பட்டுள்ள நிதி மற்றும் சொத்துப் பரிமாற்றல்களில் இடம்பெற்றுள்ள மோசடிகள் தொடர்பாக மேற்குறிப்பிட்ட விசாரணை ஆணைக்குழுவால் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக துரிதகதியில் சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு சட்டமா அதிபரிடம் ஒப்படைத்தல்

• மத்திய வங்கியின் வங்கிகள் தவிர்ந்த நிதி நிறுவனங்களின் கண்காணிப்புக்களுக்கான திணைக்களத்தை முழுமையாக மறுசீரமைத்து நிதி நிறுவனங்களின் ஒழுங்குபடுத்தல்களுக்காக புதிய நிறுவனக் கட்டமைப்பொன்றை உருவாக்குமாறு நிதி அமைச்சுக்கு அறிவித்தல்.

• நீதி அமைச்சர் குறித்த விசாரணை ஆணைக்குழு அறிக்கை மற்றும் அதற்கமைவாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான விடயங்களைப் பாராளுமன்றில் சமர்ப்பித்தல்

The post 12.10.2020 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் appeared first on NEWSPLUS Tamil.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

32 Views