வியட்நாமில் மண்சரிவுகள் -90 பேர் பலி -34 பேரை காணவில்லை

வியட்நாமில் பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பல இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதில் 90 பேர் பலியாகி உள்ளனர்.

வியட்நாமின் குவாங் ட்ரை, துவா தியன், ஹியூ, குவாங் நம் ஆகிய மாகாணங்களில் கடுமையான மழை பெய்ததன் காரணமாக பல இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டதாகவும் இந்த மண்சரிவில் சிக்கி சுமார் 90 பேர் உயிாிழந்துள்ளதுடன் 34 பேர் காணாமல் போயுள்ளதாகவும் மீட்புக்குழுவினா் தொிவித்துள்ளனா்..

மேலும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவா்களின் வீடுகள் பாதிப்படைந்துள்ளமையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதெனவும் தொிவிக்கப்பட்டுள்ளது.

எதிா்வரும் புதன்கிழமை வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. #vietnam #வியட்நாம் #மண்சரிவு #பலி #காணவில்லை #கனமழை

The post வியட்நாமில் மண்சரிவுகள் -90 பேர் பலி -34 பேரை காணவில்லை appeared first on GTN.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

34 Views