லங்கா ப்ரீமியர் (LPL) லீக் தொடரின் வீரர்கள் ஏலம் நிறைவு

லங்கா ப்ரீமியர் லீக் (LPL) தொடருக்கான வீரர்கள் ஏலம், இன்று (19) இணையவழி வாயிலாக நடைபெற்று முடிந்திருக்கின்றது.

லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் புதிய இலச்சினை வெளியீடு

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கும் லங்கா ப்ரீமியர் லீக் T20 தொடரில் கண்டி, கொழும்பு, தம்புள்ளை, காலி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஐந்து அணிகள் பங்பெறவிருக்கின்றன.  

அதன்படி, இன்று நடைபெற்ற வீரர்கள் ஏலத்தில் லங்கா பிரிமியர் லீக் தொடரில் விளையாடும் ஐந்து அணிகளதும் உரிமையாளர்கள் தங்களது குழாம்களுக்கான வீரர்களை கொள்வனவு செய்திருந்தனர். 

இந்த வீரர்கள் ஏலத்தில் வெளிநாட்டு வீரர்கள் சுமார் 75 பேர் வரையில் பங்குபற்றிய போதும் சில வீரர்களே, அணி உரிமையாளர்கள் மூலம் கொள்வனவு செய்யப்பட்டிருந்தனர்.

இதில் வெளிநாட்டில் இருந்த வந்த வீரர்களில் நட்சத்திர வீரர்களாக சிலர் அறிமுகம் செய்யப்பட்டிருந்தனர். அந்த வீரர்களில், மேற்கிந்திய தீவுகளின் அன்ட்ரு ரசல், பாப் டு பிளேசிஸ் ஆகியோர் கொழும்பினை பிரதிநிதித்துவம் கொழும்பு கிங்ஸ் அணியினால் கொள்வனவு செய்யப்பட, டேவிட் மில்லர், கார்லோஸ் ப்ராத்வைட் ஆகியோர் தம்புள்ளை நகரினை பிரதிநிதித்துவம்  செய்யும் தம்புள்ளை ஹவ்க்ஸ் அணியினாலும், சஹீட் அப்ரிபடி, கொலின் இங்ரம் ஆகியோர் காலியின் கிளேடியேட்டர்ஸ் அணியினாலும், டாவிட் மலான் யாழப்பாண நகரினை பிரதிநிதித்துவம் செய்யும் ஜப்னா ஸ்டேலியன் அணியினாலும், கிறிஸ் கெயில், லியாம் ப்ளன்கட் ஆகியோர் கண்டியின் டஸ்கர்ஸ் அணியினாலும் கொள்வனவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

மேலதிக வெளிநாட்டு வீரர்க கொள்வனவுகளை நோக்கும் போது ஐ.பி.எல். T20 தொடரில் விளையாடும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் முன்னாள் விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரரான மன்விந்தர் பிஸ்லா கொழும்பு கிங்ஸ் அணியினால் கொள்வனவு செய்யப்பட்டிருந்தார். பிஸ்லா தவிர, வேகப்பந்துவீச்சாளரான மன்பிரிட் கோனி கொழும்பு கிங்ஸ் அணியினால் கொள்வனவு செய்யப்பட்டிருந்தார். 

நியூசிலாந்து சுற்றுப்பயணத்திலிருந்து விலகிய ரசல், சிம்மண்ஸ், லூவிஸ்

மறுமுனையில் இலங்கை வீரர்களினை நோக்கும் போது அஞ்சலோ மெதிவ்ஸ் கொழும்பு கிங்ஸ் அணியின் நட்சத்திரவீரராகவும், தசுன் ஷானக்க தம்புள்ளை ஹவ்க்ஸ் அணியின் நட்சத்திரவீரராகவும், லசித் மாலிங்க காலி கிளேடியேட்டர்ஸ் அணியின் நட்சத்திரவீரராகவும், திசர பெரேரா ஜப்னா ஸ்டேலியன் அணியின் நட்சத்திரவீரராகவும், குசல் ஜனித் பெரேரா கண்டி டஸ்கர்ஸ் அணியின் நட்சத்திரவீரராகவும் வீரர்கள் ஏலத்தின் போது தெரிவு செய்யப்பட்டிருந்தனர். 

இவர்கள் தவிர இருகைகளினாலும் பந்துவீசும் ஆற்றல் கொண்ட கமிந்து மெண்டிஸ் கண்டி டஸ்கர்ஸ் அணியினால் கொள்வனவு செய்யப்பட, வனிந்து ஹஸரங்க ஜப்னா ஸ்டேலியன்ஸ் அணியினால் வாங்கப்பட்டிருந்தார். 

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் நம்பிக்கைக்குரிய வீரர்களாக உருவாகி வரும் தனன்ஞய டி சில்வா, அவிஷ்க பெர்னாந்து ஆகிய இருவரினையும் ஜப்னா ஸ்டேலியன்ஸ் அணி வாங்கியிருந்தது. இதேநேரம், குசல் மெண்டிஸ், அசேல குணரத்ன ஆகியோர் கண்டி டஸ்கர்ஸ் அணியின் வீரர்களாக மாறிக் கொண்டார். 

Video – Army லீக்கில் துடுப்பாட்டத்தில் கலக்கும் Chandimal..! |Sports RoundUp – Epi 135

இலங்கை அணிக்காக T20 போட்டிகளில் திறமை காட்டும் அதிரடி துடுப்பாட்டவீரரான பானுக்க ராஜபக்ஷ, அகில தனன்ஞய ஆகியோர் காலி கிளேடியட்டர்ஸ் அணி வீரர்களாக வீரர்கள் ஏலத்தின் போது மாறிக் கொண்டனர்.

இளம் வீரர்களை நோக்கும் போது இளம்வேகப்பந்துவீச்சாளரான மொஹமட் சிராஸ், மதீஷ பதிரன, நுவான் துஷார மற்றும் அசித்த பெர்னாந்து ஆகியோர் காலி கிளேடியேட்டர்ஸ் அணியினால் வாங்கப்பட சரித் அசலன்க ஜப்னா ஸ்டேலியன்ஸ் அணியினால் தெரிவு செய்யப்பட்டிருந்தார். 

அதேநேரம், பாடசாலைக் கிரிக்கெட்டில் சிறப்பாக செயற்பட்டிருந்த யாழ்ப்பாண வீரர்களான விஜயகாந்த் வியாஸ்காந்த், தெய்வேந்திரம் டினோஷன் மற்றும் கனகரட்னம் கபில்ராஜ் ஆகியோரும் ஜப்னா ஸ்டேலியன்ஸ் அணிக்காக விளையாடும் சந்தர்ப்பத்தினை வீரர்கள் ஏலம் மூலம் பெற்றுக் கொண்டனர். 

ஆனால், இந்த வீரர்கள் ஏலத்தின் போது இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரர்களான லஹிரு திரிமான்ன, திமுத் கருணாரட்ன போன்ற வீரர்கள் எந்த அணிகளினாலும் கொள்வனவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். 

ஏலத்தில் கொள்வனவு செய்யப்பட்ட வீரர்கள் விபரம்

கொழும்பு கிங்ஸ் – அஞ்சலோ மெதிவ்ஸ், அன்ட்ரே ரசல், பாப் டு பிளேசிஸ், மன்பிரீட் சிங் கோனி, மன்விந்தர் பிஸ்லா, இசுரு உதான, தினேஷ் சந்திமால், அமில அபொன்சோ, அஷான் பிரியஞ்சன், ரவிந்தர்பல் சிங், ஜெப்ரி வன்டர்சேய், துஷ்மந்த சமீர, திக்ஷில டி சில்வா, தரிந்து கெளசால், லஹிரு உதார, ஹிமேஷ் ராமநாயக்க, கலன பெரேரா, தரிந்து ரத்நாயக்க, நவோத் பரணவிதான

தம்புள்ளை ஹவ்க்ஸ் – தசுன் ஷானக்க, டேவிட் மில்லர், கார்லோஸ் ப்ராத்வைட், சமிட் பட்டேல், நிரோஷன் டிக்வெல்ல, லஹிரு குமார, ஒசத பெர்னாந்து, கசுன் ராஜித, போல் ஸ்ரிலிங், லஹிரு மதுசங்க, உபுல் தரங்க, அஞ்சலோ பெரேரா, ரமேஷ் மெண்டிஸ், புலின தரங்க, அஷேன் பண்டார, டில்சான் மதுசங்க, சசிந்து கொலம்பகே

காலி கிளேடியேட்டர்ஸ் – லசித் மாலிங்க, சஹிட் அப்ரிடி, கொலின் இன்ங்ரம், ஹஸ்ரத்துல்லா சஷாய், மொஹமட் ஆமீர், தனுஷ்க குணத்திலக்க, பானுக்க ராஜபக்ஷ, அகில தனன்ஞய, மிலிந்த சிறிவர்தன, சர்பராஸ் அஹ்மட், அஷாம் கான், லக்ஷான் சந்தகன், ஷெஹான் ஜயசூரிய, அசித்த பெர்னாந்து, நுவான் துஷார, மொஹமட் சிராஸ், தனன்ஞ லக்ஷான், ஷானக்க ருவன்சிரி, சஹான் ஆராய்ச்சி

ஜப்னா ஸ்டால்லியன்ஸ் – திசர பெரேரா, டாவிட் மலான், வனிந்து ஹஸரங்க, சொஹைப் மலிக், உஸ்மான் சின்வாரி, அவிஷ்க பெர்னாந்து, தனன்ஞய டி சில்வா, சுரங்க லக்மால், பினுர பெர்னாந்து, ஆசிப் அலி, மினோத் பானுக்க, சத்துரங்க டி சில்வா, மஹேஷ் தீக்ஷன, சரித் அசலன்க, நுவனிது பெர்னாந்து, கனகரட்னம் கபில்ராஜ், விஜயகாந்த் வியாஸ்காந்த்

கண்டி டஸ்கர்ஸ் – குசல் ஜனித் பெரேரா, கிறிஸ் கெயில், லியாம் ப்ளன்கட், வஹாப் ரியாஸ், குசல் மெண்டிஸ், நுவன் பிரதீப், சீக்குகே பிரசன்ன, அசேல குணரத்ன, நவீன் உல் ஹக், கமிந்து மெண்டிஸ், டில்ருவான் பெரேரா, பிரியாமல் பெரேரா, கவிஷ்க அஞ்சுல, லசித் எம்புல்தெனிய, லஹிரு சமரக்கோன், நிஷான் மதுஷ்க பெர்னாந்து, சாமிக்க எதிரிசிங்க, இஷான் ஜயரட்ன

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<

The post லங்கா ப்ரீமியர் (LPL) லீக் தொடரின் வீரர்கள் ஏலம் நிறைவு appeared first on ThePapare.com.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

27 Views