மாவனல்லை மக்களுக்கு PHI விடுக்கும் முக்கிய அறிவித்தல்

நாளை முதல் (17) வீட்டில் இருந்து வெளியே செல்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் முச்சக்கரவண்டி, சைக்கிள், மோட்டார் சைக்கிள் போன்றவற்றில் பயணிப்பவர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். மேலும் பிள்ளைகளை எந்த காரணத்திற்காகவும் வீட்டில் இருந்து வெளியே அனுப்ப வேண்டாம் எனவும் பொது சுகாதார பரிசோதகர் (PHI) மாவனல்லை நியூஸிக்கு தெரிவித்தார்.

விஷேடமாக ஹிங்குலோயா பிரதேசத்தை சேர்ந்தவர்கள் இந்த விடயம் தொடர்பில் அதிக அவதானம் செலுத்துமாறும் பொது சுகாதார பரிசோதகர் (PHI) வேண்டிக்கொண்டுள்ளார்.

மேலே குறிப்பிட்ட சுகாதார ஒழுங்கு விதிகளை மீறும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும்  தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

24 Views