மத்திய வங்கக் கடலில் சூறாவளி: சென்னை வானிலை ஆய்வு நிலையம் எச்சரிக்கை

அந்தமான் கடல் பகுதிகளில் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் அறிய வருவதாவது,

18-ஆம் திகதி (நாளை) அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

19 ஆம் திகதி மத்திய வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

20 ஆம் திகதி மத்திய மேற்கு வங்கக் கடல், வட தமிழகம் மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

இதனால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

The post மத்திய வங்கக் கடலில் சூறாவளி: சென்னை வானிலை ஆய்வு நிலையம் எச்சரிக்கை appeared first on jaffnavision.com.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

29 Views