மட்டக்களப்பு பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று பெண் குழந்தைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் திராய்மடு பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஒரே சூலில் உருவான 3 பெண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். இந்நிகழ்வு வெள்ளிக்கிழமை (16) பிற்பகல் அம்பாறை மாவட்டம் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு திராய்மடு சுவிஸ்கிராமம் பகுதியை சேர்ந்த 31 வயதுடைய பெண்ணொருவருக்கு பிரவச வலி ஏற்பட்டதையடுத்து 13.10.2020 அன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காலை அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் இடப்பற்றாக்குறை காரணமாக 15.10.2020 அன்று கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து 16.10.2020 பிற்பகல் அங்கு அறுவை சத்திரசிகிச்சை மூலம் 3 பெண் குழந்தைகள் பெறுவிக்கப்பட்டதுடன் தாயாரும், குழந்தைகளும் ஆரோக்கியமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இச் சத்திர சிகிச்சையை வைத்தியர் எம்.கே தௌபிக், மகப்பேற்று வைத்திய நிபுணர் ராஜிவ் விதானகே தலைமையிலான வைத்திய குழுவினர் மேற்கொண்டனர்.

பெண்ணின் கணவர் கடற்தொழிலாளி என்பதுடன் ஏற்கனவே இத்தம்பதியினருக்கு பெண், ஆண் என இரு குழந்தைகள் உள்ளன.

மேலும் இவ்வைத்தியசாலையில் இவ்வாண்டில் ஒரே சூலில் கரு உருவாகி 3 குழந்தைகள் பிறக்கும் நிகழ்வு இதனோடு சேர்த்து நான்காவது சந்தர்ப்பம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post மட்டக்களப்பு பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று பெண் குழந்தைகள் appeared first on jaffnavision.com.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 Views