பிள்ளையானுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் நவம்பர் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கொரோனா தொற்று அச்சம் காரணமாக, சட்டாமா அதிபர் திணைக்கள சட்டத்தரணிகள், நீதிமன்றத்துக்கு சமூகமளிக்காதமையால் இவ்வாறு வழக்கு விசாரணைகள், நவம்பர் 2ம், 10ம் ,16ம் திகதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடா்பில் கைது செய்யப்பட்டுள்ள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் மீதான குறித்த வழக்கு விசாரணை, மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் இன்று (19) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #பிள்ளையான் #கொரோனா #ஜோசப்பரராஜசிங்கம்

The post பிள்ளையானுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு appeared first on GTN.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

31 Views