திருமணம் செய்யவிருந்த நாளில் கொரோனாத் தொற்றுக்குள்ளான இளம் பெண்..!

கொழும்பின் புறநகர் பகுதியில் திருமணம் செய்தவிருந்த நாளில் இளம் பெண் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.நீர்கொழும்பு நகரத்தில் உள்ள பிரபல வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.அவர்களின் மகனின் திருமண நிகழ்வு கடந்த 3ஆம் திகதி திவுலப்பிட்டிய பிரதேசத்தில் நடத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய இந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டவர்களின் PCR பரிசோதனை இன்றைய தினம் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.குறித்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டதாக சந்தேகிக்கப்படும் மொரட்டுமுல்ல, குசகினிவத்த பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 14ஆம் திகதி கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக உறுதியாகியுள்ளது.அதனைத் தொடர்ந்து அந்த பிரதேசத்தில் அவருடன் திதில் கலந்து கொண்ட அனைவரும் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.அதற்கமைய அவர்களின் PCR பரிசோதனை முடிவுகளுக்கமைய 27 வயதுடைய பெண் ஒருவர் நேற்று காலை தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.இந்த பெண் நேற்றைய தினம் திருமண பந்தத்தில் இணையவிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

32 Views