சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் வேட்பாளராக ஜோன் செனவிரட்ன?

பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அமைச்சு பதவியோ ராஜாங்க அமைச்சு பதவியோ வழங்கப்படாத சிரேஷ்ட உறுப்பினர்களை எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த அந்த கட்சி கவனம் செலுத்தி வருகிறது.

இதனடிப்படையில், சப்ரகமுவ மாகாணத்திற்கு ஜோன் செனவிரட்னவையும், வடமேல் மாகாணத்திற்கு அனுர பிரியதர்ஷன யாப்பாவையும், மேல் மாகாணத்திற்கு சுசில் பிரேமஜயந்தவையும், ஊவா மாகாணத்திற்கு டிலான் பெரோவையும், தென் மாகாணத்திற்கு ஷான் விஜேலால் டி சில்வா அல்லது சந்திம வீரக்கொடி ஆகிய இருவரில் ஒருவரையும் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவது குறித்து பொதுஜன பெரமுன ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது.

அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய நாடாளுமன்றத்தில் இருந்து கீழே உள்ள அரசியல் நிறுவனம் ஒன்றுக்கு போட்டியிட வேண்டுமாயின் அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

இவர்கள் ராஜினாமா செய்யும் பட்சத்தில் விருப்பு வாக்கு பட்டியலில் அடுத்து இருக்கும் நபருக்கு நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும் வாய்ப்பு கிடைக்கும்.

நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்ய வேண்டிய பொதுஜன பெரமுனவை சேர்ந்தவர்கள் இருப்பதால், சிரேஷ்ட உறுப்பினர்களை முதலமைச்சர் வேட்பாளர்களாக நிறுத்தும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

36 Views