க.பொ.த உயர்தர பரீட்சைக்கான வெட்டுப் புள்ளிகள் தயாரிக்கும் பணிகள் நிறைவு

 

2019 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சைக்கான வெட்டுப் புள்ளிகள் தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் தயாரிக்கப்பட்டுள்ள வெட்டுப் புள்ளிகளை வெளியிடுவது தொடர்பில் இதுவரை எந்தவொரு தீர்மானமும் எட்டப்படவில்லையென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க கூறியுள்ளார்.

தற்போது க.பொ.த உயர்தர பரீட்சைகள் நடைபெற்று வருவதால் வெட்டுப் புள்ளிகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் க.பொ.த உயர்தர பரீட்சைகள் நடைபெற்ற நிலையில் வெட்டுப் புள்ளிகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.

இதற்கு மாணவர்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

எவ்வாறாயினும் கொரோனா அச்சுறுத்தல் நிலைமை காரணமாகவே வெட்டுப் புள்ளிகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்க கூறியுள்ளார்.

The post க.பொ.த உயர்தர பரீட்சைக்கான வெட்டுப் புள்ளிகள் தயாரிக்கும் பணிகள் நிறைவு appeared first on jaffnavision.com.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

34 Views