கொரோனா கொத்தணிகள் சமூக தொற்றாக மாறும் அபாயம்

நாட்டில் பல இடங்களிலும் கண்டறியப்பட்ட கொரோனா கொத்தணிகள் சமூக தொற்றாக மாறும் அபாயம் உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் விடுத்துள்ளது.

பெரும்பாலான இடங்களில் இந்த கொரோனா தொற்றுக்கான அடிப்படைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனினும் பல சந்தர்ப்பங்களில் அந்த கொரோனா தொற்றுக்கான ஆரம்ப காரணிகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

எனவே சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என சம்மேளனத்தின் செயலாளர் வைத்திய கலாநிதி நவீன் டி சொய்ஸா விடுத்துள்ளார்.

இதற்கிடையில் ஜனாதிபதியுடனும் சுகாதார அமைச்சருடனும் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையின் போது கொரோனா தொற்று ஒரு இடத்திலிருந்து ஏனைய இடங்களிற்கு பரவாமல் இருக்க, குறித்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தாம் முன்வைத்துள்ளதாகவும் அரச மருத்துவ சுகாதார அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்திய கலாநிதி நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

24 Views