கொரோனாவை குணப்படுத்த புதிய சிகிச்சை முறையைக் கண்டுபிடித்து அசத்தல் சாதனை படைத்த 14 வயதுச் சிறுமி!!

கொரோனா வைரஸைக் குணப்படுத்த சாத்தியமான சிகிச்சை முறையினை கண்டறிந்த அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கு 18 லட்சம் ரூபா பரிசு வழங்கப்பட்டுள்ளது.அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் அனிகா செப்ரோலு(வயது 14). டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வருகிறார்.கொரோனா வைரஸை சிலிகோ முறையில் மூலம் மூலக்கூறுகளைக் கண்டறிந்து அதன்மூலம் வைரஸின் கூட்டு புரதத்தை பிணைக்கலாம் என்ற சிகிச்சைமுறையைக் கண்டறிந்துள்ளார்.இதற்காக சிறுமி அனிகாவுக்கு பாராட்டும் ,18 லட்ச ரூபாய் பரிசும் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூறும் சிறுமி அனிகா தனது ஆய்வுகள் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பானது என்றும் நம்முடைய கூட்டு நம்பிக்கை இந்த கொரோனா தொற்றை முடிவுக்கு கொண்டுவரும் என்று நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.அனிகாவின் ஆராய்ச்சி கொரோனாவை வேரோடு அழிக்க உதவும் என்றே கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

31 Views