கைக்குண்டுடன் இளைஞா் கைது

யாழ் -சாவகச்சேரி – கச்சாய் பகுதியில் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞாிடமிருந்து கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.

வீடொன்றில் சந்தேகநபா் தங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த வீட்டினை சுற்றிவளைத்து தேடுதல் மேற்கொண்ட காவல்துறையினா் சந்தேகநபரை கைது செய்ததுடன் கைக்குண்டினையும் மீட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவா் 31 வயதானவா் எனவும் அவா் யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் போில் கைது செய்துள்ளதாகவும் காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.

மேலும் இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபா் வவுனியா பேருந்து நிலையத்தில் கடமையாற்றுபவா் எனத் தொிவித்துள்ள சாவகச்சோி காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை தொடா்ந்தும் முன்னெடுத்து வருகின்றனா் #கைக்குண்டு #இளைஞா் #கைது #சாவகச்சேரி #வாள்வெட்டு

The post கைக்குண்டுடன் இளைஞா் கைது appeared first on GTN.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

30 Views