கேகாலை மாவட்ட மக்களுக்கான விசேட அறிவித்தல்

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த கேகாலை மாவட்டத்தை செர்ந்த 6 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வரக்காபொல 03 பேரும் கேகாலையிலிருந்து 01 வரும், ருவன்வெல்ல 01, யட்டியந்தோட்டை 01 வரும் இதுவரை இணங்காணப்பட்டுள்ளனர்.

கேகாலை மாவட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் நேற்று முதல் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன் சகல பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி நிலையங்கள், முன்பள்ளிகள் நேற்று முதல் தடை செய்யப்பட்டுள்ளதுடன் சுகாதார அமைச்சின் கொரோனா அறிவுறுத்தலை கடைப்பிடிக்குமாறு கொரோனா தடுப்பு செயலணியில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் மகிந்த எஸ் வீரசூரிய மாவனல்லை நியூஸிக்கு தெரிவித்தார்.

கேகாலை மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் கூட்டம் சப்ரகமுவ மாகாண ஆளுநர் தலைமையில் நேற்று புதன்கிழமை மாவட்ட செயலக மண்டபத்தில் இடம்பெற்றது, இதன்போது எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

கம்பஹாவில் தற்போது ஏற்பட்ட கொரோனா நிலைமை காரணமாக எமது மாவட்டத்தில் அதனை தடுப்பது தொடர்பாக ஆராயப்பட்டது. இதில் அனைத்து பெதுமக்களுக்கும் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், அத்தியவசிய தேவைகளுக்கு மாத்திரம் மக்கள் நகரங்களுக்கு வறுமாறும் அத்தியாவசிய தேவை இன்றி நகரங்களுக்கு மற்றும் பொதுவான இடங்களில் மக்கள் கூடுவதை முற்றாக தவிர்ந்து கொள்ளவேண்டும் எனவும் வர்த்தக நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது இடைவெளியை கடைப்பிடிக்கவேண்டும்.

இதேவேளை கேகாலை மாவட்டத்தில் ஏதேனும் அவசர நிலைமை ஏற்பட்டால் அதற்கான நடவடிக்கிகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

89 Views