குணமடைந்து வீடுகளுக்கு திரும்பிய கொரோனா தொற்றாளர்கள்

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 37 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 3 ஆயிரத்து 440 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, மினுவங்கொட கொரோனா கொத்தணியில் மேலும் 47 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் 43 பேர் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என்றும் 4 பேர் தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் என்றும் அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, மினுவங்கொடை கொரோனா கொத்தணியில் அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 2ஆயிரத்து 122ஆக அதிகரித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 585 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் தொற்றுக்கு உள்ளான 2 ஆயிரத்து 132 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும் இந்த வைரஸ் காரணமாக இலங்கையில் இதுவரையில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

27 Views