குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை3,440 ஆக உயர்வு!

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 37 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதனால் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது இலங்கையில் 3,440 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை நாட்டில் இன்றைய தினம்(19.10.2020) 110 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமையினால் மொத்த கொரானா தொற்றாளர்களின் எண்ணிக்கை 5,585 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களுள் 47 பேர் மினுவாங்கொடை கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள் ஆவர். 

இது இவ்வாறிருக்க மினுவாங்கொடை கொவிட்-19 கொத்தணிப் பரவலில் பாதிக்கப்பட்ட மொத்த கொரோனா தொற்றாளர்களது எண்ணிக்கை 2,122 ஆக உயர்வடைந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் 16 வெளிநாட்டினர் உட்பட 2,132 கொரோனா நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேநேரம் கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் 297பேர் தொடர்ந்தும் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

Source link

The post குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை3,440 ஆக உயர்வு! appeared first on Helanews.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

22 Views