காதிரைச்சல் பாதிப்பை குணப்படுத்தும் நவீன சிகிச்சை

உலக மக்கள் தொகையில் 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரையிலான மக்களுக்கு காதிரைச்சல் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு தற்போது மின் அதிர்வு சிகிச்சை முறை மூலம் முழுமையான நிவாரணம் கிடைப்பதற்கான நவீன சிகிச்சை கண்டறியப்பட்டிருக்கிறது.

இன்றைய திகதியில் எம்முடைய மக்களில் பலரும் பேசுவதற்கும், சுவைப்பதற்கும் பயன்படும், வலிமையான தசைகளாலான நாக்கின் ஆரோக்கியத்தை, அதற்குரிய முறைகளில் முழுமையாக பராமரிப்பதில்லை. இதன் காரணமாக நாக்கின் மேல் பகுதியில் நுண்ணுயிரிகள் படிகின்றன.

இத்தகைய நுண்ணுயிரிகள் இதய ஆரோக்கியத்திற்கு எதிராக செயல்பட்டு, நாட்பட்ட இதய பாதிப்பை உண்டாக்குகின்றன என்று விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள். அதே தருணத்தில் காதிரைச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாக்கில் சிகிச்சை அளிப்பதன் மூலம் நிவாரணம் அளிக்கிறார்கள். 

அதாவது நாக்கின் நுனியில் பிரத்தியேக கருவிகள் மூலம் மின் அதிர்வுகளை ஏற்படுத்தி, அதன்மூலம் காது இரைச்சல் பாதிப்பை குறைக்கிறார்கள். இத்தகைய சிகிச்சை குறைந்தபட்சம் 10க்கு மேற்பட்ட அமர்வுகளில் வழங்கப்படுவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

டொக்டர் வேணுகோபால்.

தொகுப்பு அனுஷா.

Source link

The post காதிரைச்சல் பாதிப்பை குணப்படுத்தும் நவீன சிகிச்சை appeared first on Helanews.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

38 Views