இலங்கையின் அதி உயர் பாதுகாப்பு சிறைச்சாலை அங்குரார்ப்பணம்

இலங்கையின் அதி உயர் பாதுகாப்பு சிறைச்சாலை நேற்றைய தினம் பூசாவில், அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துசார உபுல்தெனியவினால் நேற்றைய தினம் இந்த சிறைச்சாலை அதிகாரபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த சிறைச்சாலை இலங்கையின் ஒரேயொரு அதி உயர் பாதுகாப்புச் சிறைச்சாலை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சிறைச்சாலையில் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய கைதிகள் தடுத்து வைக்கப்படுவார்கள் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

34 Views