இயக்குநராகியிருக்கும் நடிகை வரலட்சுமி சரத்குமார் | Virakesari.lk

கண்ணாமூச்சி என்ற படத்தின் மூலம் நடிகை வரலட்சுமி சரத்குமார் இயக்குநராகியிருக்கிறார்.

 நடிகர் சரத்குமாரின் மகளும்‘போடா போடி’ என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நடிகையாகவும் அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். சர்க்கார், சண்டக்கோழி என வெற்றிப்பெற்ற படங்களில் தன்னுடைய திறமையான பங்களிப்பை அளித்து, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த இவர், தற்போது ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘கண்ணாமூச்சி’ என்ற படத்தின் மூலம் இயக்குநராகியிருக்கிறார். 

கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இந்த படத்திற்கு சாம் சி எஸ் இசையமைக்க, இயக்குநராகயிருக்கும் வரலட்சுமி சரத்குமார் கதையின் நாயகியாகவும் நடித்திருக்கிறார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை அரசியல், சமூகம் மற்றும் திரை உலகை சார்ந்த பிரபலமான ஐம்பது பெண்மணிகள் தங்களது இணையப்பக்கத்தில் ஒரே தருணத்தில் வெளியிட்டு சிறப்பித்தனர்.

Source link

The post இயக்குநராகியிருக்கும் நடிகை வரலட்சுமி சரத்குமார் | Virakesari.lk appeared first on Helanews.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

41 Views