இணையத்தில் லீக் ஆகிய ஐபோன் 12 மாடல்களின் சொல்லப்படாத தகவல்

இணையத்தில் லீக் ஆன ஐபோன் 12 சீரிஸ் சொல்லப்படாத தகவல்
ஐபோன் 12 மினி மற்றும் ஐபோன் 12 பேட்டரி விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இவை பிரேசில் நாட்டு டெலிகாம் நிறுவனமான அனடெல் மூலம் தெரியவந்து இருக்கிறது. பேட்டரி விவரங்கள் மட்டுமின்றி இவற்றின் உற்பத்தி தகவல்களும் வெளியாகி உள்ளன.
அந்த வகையில் ஐபோன் 12 மினி மாடலில் 2227 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இது ஐபோன் எஸ்இ 2020 மாடலல் வழங்கப்பட்ட 1821 எம்ஏஹெச் பேட்டரியை விட அதிகம் ஆகும். ஐபோன் 12 மாடலில் 2815 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படுகிறது.
 ஐபோன் 12 மினி ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் மாடல்களின் பேட்டரி திறனை எப்போதும் அறிவிக்காது. எனினும், ஆப்பிள் வலைதளத்தில் ஐபோன் 12 கிட்டத்தட்ட 15 மணி நேர வீடியோ பிளேபேக் வழங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஐபோன் 12 மற்றும் 12 ப்ரோ மாடல்கள் 17 மணி நேர பிளேபேக் வழங்குகின்றன.
உற்பத்தியை பொருத்தவரை ஐபோன் 12 ப்ரோ மாடல் இந்தியா மற்றும் பிரேசில் நாடுகளில் உள்ள பாக்ஸ்கான் ஆலையில் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஐபோன் 12 மாடல் உற்பத்தி பணிகள் இந்தியாவில் உள்ள விஸ்ட்ரன் உற்பத்தி ஆலையில் 2021 வாக்கில் துவங்கும் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

36 Views