வவுனியா ஓமந்தை பகுதியில் இருவரின் சடலங்கள் மீட்பு.

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாணிக்கர் வளவுப்பகுதியில் வீடொன்றில் இருந்து இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் இரண்டு சடலங்கள் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. சம்பவ இடத்திற்கு பொலிஸார், தலையில் பாரிய வெட்டுக்காயங்களுடன் இரண்டு சடலங்களை மீட்டுள்ளனர்.

மேலும் ஒருவர் படுகாயமடைந்திருந்த நிலையில் நோயாளர் காவுவண்டி மூலம் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவரது நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் மாணிக்கர் வளவு கிராமத்தின் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவரான 4 பிள்ளைகளின் தந்தையான கோபால் குகதாசன் (40 வயது) மற்றும் கரிப்பட்ட முறிப்பை சேர்ந்த சிவானு மகேந்திரன் (34 வயது) ஆகிய இருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டடுள்ளனர்.

சுப்பிரமணியம் சிவாகரன் என்ற நபர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் மாணிக்கர் வளவில் வசித்துவரும் இளைஞர் ஒருவர் ஓமந்தை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

38 Views