மீண்டும் கோரத் தாண்டவமாடும் கொரோனா…சர்வதேச ரீதியில் 400000 பேருக்கு தொற்று..!!

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் முதல் முறையாக 400,000 ஆக அதிகரித்துள்ளன.

நோய்த்தொற்றுகளின் முதல் எழுச்சியை வெற்றிகரமாக குறைத்த ஐரோப்பா, சமீபத்திய வாரங்களில் புதிய கொரோனா வைரஸ் மையமாக உருவெடுத்துள்ளது, கடந்த வாரத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 140,000 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளர்.ஒரு பிராந்தியமாக, இந்தியா, பிரேசில் மற்றும் அமெரிக்கா இணைந்ததை விட ஐரோப்பாவில் நாளாந்தம் அதிகளவிலான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.உலகெங்கிலும் பதிவாகும் ஒவ்வொரு 100 பேரில் 34 பேர் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.குறிப்பாக தற்போது ஒவ்வொரு ஒன்பது நாட்களுக்கும் ஒரு மில்லியன் புதிய நோயாளிகள் அடையாளம் காணப்படும் அதேவேளை தொற்று தொடங்கியதிலிருந்து 6.3 மில்லியனுக்கும் அதிகமான நோயாளிகள் ஐரோப்பாவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.பல ஐரோப்பிய நாடுகள் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கியுள்ளன .அறுவை சிகிச்சைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.அத்தோடு ரஷ்யா மாணவர்களை ஒன்லைன் கற்றலுக்கு நகர்த்தி வருகிற அதேவேளை வடக்கு அயர்லாந்து இரண்டு வாரங்களுக்கு பாடசாலைகளையும் நான்கு உணவகங்களையும் மூடுகிறது.ஸ்பெயினில், கட்டலோனியாவில் அதிகாரிகள் 15 நாட்கள் மதுபான நிலையங்கள் மற்றும் உணவகங்களை மூட உத்தரவிட்டனர் மற்றும் கடைகளில் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையையும் மட்டுப்படுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

28 Views