மாகாணசபைத் தேர்தலில் களமிறங்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹூம் எம்.பி.ஏ.அஸீஸ் அவர்களின் வாரிசு!
-சியாத் அகமட்லெப்பை-
கடந்த 2012.11. 05திகதி திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்திருந்த திகாமடுல்ல மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.பி.ஏ.அஸீஸ் அவர்களின் வாரிசான அவரது மகன் அமான் அஸீஸ் அவர்கள் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது குறித்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தேசியகாங்கிரஸ் எனும் பல கட்சிகள் போட்டியிடவுள்ளன, இக்கட்சிகளிலிருந்து ஏதேனும் ஒரு கட்சியில் தான் போட்டியிட உள்ளதாகவும் அது எந்த கட்சி என்பதை வேட்புமனு தாக்கள் செய்யும் நாளிலேயே தான் மக்களுக்கு அறியத் தருவேன் என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹூம் அஸீஸ் அவர்களின் புதல்வர் அமான் அஸீஸ் தெரிவித்தார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது சஜித்தோடு இணைந்து ஐக்கிய மக்கள் சக்தியினூடாக டெலிபோன் சின்னத்தில் போட்டியிட்டது. அதேவேளை தேசிய காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டது இதனுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு பொத்துவில் சார்பாக போட்டியிட்டிருந்த கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் ஊடகவியலாளர் முஸாரப் அவர்கள் வெற்றியை கண்டிருந்தார். இதனைத் தொடர்ந்து மற்றுமொரு தேர்தலாக மாகாணசபைத் தேர்தலை சந்திக்கவிருக்கின்றோம் இத் தேர்தலில் மக்களின் விருப்பத்தோடு தான் போட்டியிட்டு வெற்றிபெறுவேன் என்பதை என்னாள் உறுதியாக கூற முடியும் என குறிப்பிட்டார்.
இதேவேளை முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர், மீண்டும் தேர்தலில் களமிறக்குவதா அல்லது மத்திய குழுத் தலைவர் சட்டத்தரணி பைசால் முகைதீன் அவர்கள் களமிறங்குவதா என்பது தொடர்பில் ஆராயப்படுகின்றது.
அத்துடன் திகாமடுல்ல மாவட்டத்தில் பொத்துவில் தொகுதியின் சார்பாக தேசியகாங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களின் புதல்வனும் அக்கரைப்பற்று மாநகரசபை மேயருமான சக்கி அதாஉல்லா அவர்களும் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதே வேலை எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் பொத்துவில் சார்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடுபவர்கள் யார் என்பதில் அமளி துமளிகள் இடம்பெறுவதை காண்கின்றோம்.
இதேவேளை,கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை அவர்களும் களமிறங்கவுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுபவம் உள்ளவர்களோடும் வாக்குப் பலம் கொண்ட கட்சியோடும் இணைந்தே தான் எனது அரசியல் பயணத்தை தொடருவேன் அதே வேளை எனது தந்தை ஆற்றிய சேவைகள் பல உண்டு இன்னும் பல சேவைகளை பொத்துவிலுக்கு ஆற்றவிருக்கும் சந்தர்ப்பத்திலேயே எனது தந்தை திடீரென காலமானார் இவரின் இழப்பு பொத்துவிலுக்கு பாரிய ஓர் இழப்பாக அமைந்திருந்தது. இதே சந்தர்ப்பத்தில்தான் தான் எனது தந்தை விட்டுச் சென்ற இடத்திலிருந்து தொடர்வதற்காக நான் அரசியலில் களமிறங்கவுள்ளேன் என்றும் அமான் அஸீஸ் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அவர் மேலும் கருத்துக்களை தெரிவிக்கையில் மறைந்த எனது தந்தையின் மருமகனான சதகத் ஹாஜியாரின் கணவாகவும் கடைசி ஆசையாகவும் இருந்த ஒரு விடயமானது மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.பி.ஏ.அஸீஸ் அவர்களின் வாரிசுகளில் யாரேனும் ஒருவர் அரசியலுக்குள்வாங்கப்பட்டு மர்ஹூம் எம்.பி.ஏ.அஸீஸ் அவர்களின் வாரிசு ஒருவர் பொத்துவில் மண்ணில் பாராளுமன்றம் செல்ல வேண்டும் எனபதேயாகும் என்பதை சதகத் ஹாஜியாரின் புதல்வர் அல்ஹாஜ் சப்ராஸ் ஹாஜியார் அவர்கள் அடிக்கொரு முறை என்னிடம் தெரிவிப்பார் இதுவே எனது தந்தையின் ஆசையாக இருந்தது என்று கூறும் அல்ஹாஜ் சப்ராஸ் சதகத் ஹாஜியார் அவர்கள் எனது அரசியல் பயணத்திற்கும் எனது வெற்றிக்கும் உழைக்க முன்வந்துள்ளார் என்பதனையும் நான் இவ்விடத்தில் தெரிவிக்கின்றேன் என குறிப்பிட்டார்.
-சியாத் அகமட்லெப்பை-