மரமொன்று முறிந்து விழுந்ததினால் முதியவரொருவர் மருத்துவமனையில் !


-எம். செல்வராஜா -பதுளை நிருபர்
                                                                     13-10-2020

‘செல்சி’ கீழ்ப்பிரிவு பெருந்தோட்ட குடியிறுப்புத் தொகுதியின் குடியிறுப்பொன்றின் மீது பாரிய மரமொன்று முறிந்து விழுந்ததினால் அக் குடியிறுப்புத் தொகுதி பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளன.

இச்சம்பவம்ரூபவ் எல்ல பிரதேசத்தின் ‘செல்சி’ பெருந்தோட்டத்தின் கீழ்ப்பிரிவில் இன்று 13-10-2020ல் பகல் இடம்பெற்றுள்ளது. இக்குடியிறுப்புத் தொகுதியில் 65 வயது நிரம்பிய முதியவரொருவர் மருத்துவமனைக்கு சென்றிருந்ததினால் அவர் தெய்வாதீனமாக உயிர்த் தப்பியுள்ளார். அக் குடியிறுப்புத் தொகுதியின் ஏனையவர்கள் தொழில் நிமித்தமாகவும் பரீட்சை நிமித்தமாகவும் வெளியில் சென்றிருந்ததினாலும் பிள்ளைகள் தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்க வைத்திருந்ததினாலும்ரூபவ் உயிர்ச் சேதங்கள் எதுவும் இடம் பெறாத போதிலும்ரூபவ் உடமைகள் பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளன.

இக் குடியிறுப்புத் தொகுதியில் 60 குடும்பங்களைச் சேர்ந்த 145 பேர் வசித்து வருகின்றனர். இம் மரங்கள் முறிந்து விழுந்த சம்பவத்தையடுத்துரூபவ் இப்பகுதியில் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன.பாதிப்பினை ஏற்படுத்தும் இப் பாரிய மரங்களை அகற்றக்கோரிரூபவ் தோட்ட மக்கள் தோட்ட நிருவாகத்திடமும்ரூபவ் கிராம சேவகர்ரூபவ் பிரதேச செயலாளர் மற்றும் சம்மந்தப்பட்ட உத்தியோகத்தர்கள் ஆகியோரிடம் பலமுறை முறைப்பாடுகளை செய்தும்ரூபவ் எவ்வித பயனும் கிடைக்கவில்லையென்று தோட்ட மக்கள் புகார்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

103 Views