புங்குடுதீவில் 3915 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

யாழ்.புங்குடுதீவில் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்றுக்குள்ளானதையடுத்து புங்குடுதீவில் 1212 குடும்பங்களை சேர்ந்த 3915 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் தொிவித்திருக்கின்றார்.
மேலும் வேலணை பிரதேசத்தில் 57 பேரும், குடாரப்பில் 82 பேரும், எழுவை தீவில் 22 பேரும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். மேலும் கொரோனா தொற்றுக்குள்ளான புங்குடுதீவு பெண் நெடுந்தீவுக்கு சென்றுவந்துள்ள நிலையில்,
அவர் பயணித்தபோது அவருடன் சேர்ந்து பேருந்து மற்றும் படகில் பயணித் 88 பேரை அடையாளம் காணும் நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. மேலும் புங்குடுதீவில் 1212 குடும்பங்களை சேர்ந்த 3915 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.
The post புங்குடுதீவில் 3915 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் appeared first on Vakeesam.