நான் பொய் வாக்கு கூறி வாக்கு பெறவில்லை. இரா.சாணக்கியன்

 

“நான் பொய்யான வாக்கினை மக்களிடம் கூறி வாக்குகளை பெற்று வெல்லவில்லை” என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நேற்று (04) நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வுகளில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தேர்தல் பிரச்சார காலங்களில் மக்களிடையே பல பொய்யான வாக்குறுதிகளை தெரிவித்து மக்களின் வாக்குகளை பெற்றவர்களும் உள்ளனர்.   அவர்கள் இன்றுமக்களை சந்திக்க கூட முடியாத நிலையில் உள்ளனர். அவர்களை போன்று நானும் பல பொய்களை மக்களிடம் தெரிவித்திருந்தால் அதிகூடிய வாக்குகளை பெற்றிருக்க முடியும்.

இந்த பிரதேசத்திலும் அவர்களுக்கு வாக்களித்த மக்களும் உள்ளனர். அவர்களிடம் சென்று அவர்கள் கூறிய வாக்குறுதிகளை நிளளைவேற்ற கூறி அழுத்தம் கொடுக்க வேண்டும்.

தற்போது கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டமான சப்பிரிகம வேலைத்திட்டமானது எந்தவிதமான அரசியற் தலையீடுகளுமின்றி வந்த நிதியினை  தாங்களே கொண்டு வந்ததாக மக்களிடம் கூறி அரச அதிகாரிகளையும் மீறி கிராம அபிவிருத்தி சங்கங்கள் ஊடாக வங்குரோத்து அரசியலை செய்து கொண்டிருக்கின்றனர். 

இந்த கிராமங்களில் பல்வேறுபட்ட பிரச்சினைகள் உள்ளன. மிகவும் முக்கிய பிரச்சினையாக குடிநீர் பிரச்சினை உள்ளது. இந்த பிரச்சினை தொடர்பாக நான் நீர் வழங்கல் அமைச்சருடன் பேசி உள்ளேன். 2021ம் ஆண்டுக்கான நீர்வழங்கும் பிரதேசங்களுக்கான பெயர்பட்டியல் ஓரிரு வாரங்களுக்குள் கிடைக்கும். அதில் இந்த கிராமங்கள் இல்லாவிடின் அதனை உட்புகுத்துவதற்கான முயற்சிகளை நான் முன்னெடுப்பேன். 
மக்களாகிய உங்களிடம் போலியான வாக்குறுதிகளை தந்தவர்கள் மீண்டும் வருவார்கள். அவர்களின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி வாக்களிக்க வேண்டாம் எனவும் தெரிவித்தார்.

போரதீவுப்பற்று பிரதேசத்தின் பிலாலிவேம்பு, வேத்துச்சேனை, விவேகானந்தபுரம், நெடியவட்டை, ஆனைகட்டியவெளி, சின்னவத்தை, காக்காச்சிவட்டை மற்றும் கூழாவடி ஆகிய கிராமங்களில் உள்ள மக்களை சந்தித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

28 Views