நாட்டை கட்டியெழுப்புவதற்கு பாராளுமன்றில் இருக்கின்ற அத்தனை உறுப்பினர்களும் முன்வர வேண்டும்: பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் முதுநபீன்

-சியாத் அகமட்லெப்பை-

நான் தயவுடன் கேட்கும் ஒரு விடயம் இந்த நாட்டிலே நாட்டுப் பற்றுள்ளவர்களை விதைக்கின்ற போதுதான் நாம் எமது நாட்டை பொருளாதாரத்திலும் சமூகவியலிலும் முன்னேற்றத்தை கொண்டு செல்லலாம்  என அம்பாரை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் முதுநபீன் சபையில் வலியுறுத்தியுள்ளார்.
நேற்று 27.08.2020 (வியாழக்கிழமை) நாடாளுமன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில், “நான் எனது தாய்மொழியான தமிழ் மொழியிலும் சில வார்த்தைகளையும் இங்கு உரையாற்றலாம் என விரும்புகின்றேன என கூறி ஆங்கில மொழியில் உரையாற்றிய அவர்  தமிழ் மொழியில் பேசத் தொடங்கினார், நான் ஒரு ஊடகவியலாளனாக பணியாற்றிய போது யாதும் ஊரே யாவரும் கேளீர் எனும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை நடாத்தியிருந்தேன், அது என்ன சொல்கிறது என்றால் எல்லாம் எனது ஊர் எல்லோரும் எனது மக்கள் என்ற கருத்தை பிரதிபலிக்கின்றது. அது என்னுடைய தொலைக்காட்சிக்கு வைத்த பெயர் மட்டுமல்ல அது என்னுடைய முழு வாழ்க்கையுமாகும் யாதும் ஊரே யாவரும் என்னுடைய மக்கள்  எனும் என்னப்பாட்டில் வாழ்பவன் நான் என தொடர்ந்தார்.
முன்னால் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான கெளரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 2019ம் ஆண்டு யுத்தத்தை இந்த நாட்டில் முடிவுக்கு கொண்டுவந்ததன் பிற்பாடு அழகான சில வார்த்தைகளை பேசினார் இந்த நாட்டிலே இரண்டு இனங்கள்தான் இருக்கின்றார்கள் ஒன்று இந்த நாட்டை நேசிக்கின்ற இனம், இன்னுமொன்று இந்த நாட்டை  எதிர்க்கின்ற இனம் என்ற கருத்துப்பாடு அவருடைய உரை அமைந்திருந்தது. அந்த உரை இந்த நாட்டில் எந்த மக்களை ஈர்த்ததோ இல்லையோ என்னை மிகவும்  ஈர்த்த ஒரு வார்த்தையாக அது இருந்தது என தனது கொள்கைப் பிரகடன உரையில்  குறிப்பிட்டிருந்தார்.
எனவே இந்த நாட்டை நேசிக்கின்ற மக்களை ஒன்று படுத்தி இப்போதைய ஜனதிபதி இந்த நாட்டை கட்டியெழுப்புவார் இனப்பாகுபாடுகளை இல்லாமல் செய்வார் சகல மக்களுக்கும் சமமான உரிமைகளை வழங்குவார் என நான் எதிர்பார்த்தேன் ஆனால் அந்த ஆட்சியிலே அந்த நிலை எய்தப்படவில்லை  அதற்கு யார் காரணம் என விரல் சூட்டுவதற்கான ஒரு தருணமும் இதுவல்ல அந்த தேவையும் இப்போது எனக்கில்லை என்று உணர்கின்றேன். ஆனால் ஒரு சாதாரணமாக இந்த நாட்டை நேசிக்கின்ற ஒரு பிரஜையாக நான் மிகவும் மனவேதனைப்பட்டேன். அதன் பிறகு நல்லாட்சி  அரசாங்கம் வந்தது நல்லாட்சசி அரசாங்கம் என்பது மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொண்ட ஒரு அரசாங்கமாக இருந்தது புதிய அரசியல் யாப்புக்கான கதவுகள் திறக்கப்பட்டன ஒரு ஊடகவியலாளனாக புதிய யாப்பு வரவேண்டும் சகல இனங்களினதுமுடைய கெளரவம் அந்தஸ்த்து பாதுகாக்கப்பட்டு இந்த அரசியல் முற்பட்டு செல்லப்பட வேண்டும் எனற என்னத்தோடு நானிருந்தேன். 
 எனவே இப்படியான சூழ்நிலையிலே இந்த அரசியல் யாப்பு முயற்சியும் கூட வெற்றியளிக்கவில்லை இறுதியாக தற்போதைய ஜனாதிபதி கோட்டாப்ப ராஜபக்ச வந்தார் அவருடைய வருகையின் பின்னர் அவர் கூறிய ஒரு வார்த்தை பெரும்பன்மை மக்களால் நான் ஆட்சிக்கு வந்திருந்தாலும் எல்லோருக்கும் நான் ஒரு ஜனாதிபதியாக இருக்கிறேன் என்ற ஒரு வார்த்தையை சொன்னார் அந்த வார்த்தை மீது கொண்ட நம்பிக்கையில்தான் இப்போது நான் பேசிக்கொண்டிருக்கின்றேன். அந்த வார்த்தை மீது நம்பிக்கை கொண்டு இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாக இருந்தால் எங்களுடைய நீதியமைச்சர் அலிசப்ரி அவர்கள் தேர்தல் பிரச்சார மேடைகளில் பேசுகின்ற போதெல்லாம் ஒரு லீக்குவான் மாதிரி அதே போன்று மகதீர் முகம்மத் போன்ற தலைவர் போன்ற ஒரு தலைவர்தான் நமது நாட்டு தலைவர் என்று அடிக்கொரு முறை சொல்வார் ஒரு லீக்குவான்லியாக இருக்கலாம் முகம்மத்தாக இருக்கலாம் தென்ஆபிரிக்காவை ஒன்றினைத்த நெல்சேன் மண்டேலாவாக இருக்கலாம் முதலிலே நாட்டில் ஒரு ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி ஒரு தேசப்பற்றை ஏற்படுத்தியதன் பிற்பாடுதான் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியுமானதாக இருக்கும். எனவேதான் நான் தயவுடன் கேட்கும் ஒரு விடயம் இந்த நாட்டிலே நாட்டுப் பற்றுள்ளவர்களை விதைக்கின்ற வேலையை பார்த்தால்தான்  நாம் எமது நாட்டை பொருளாதாரத்திலும் சமூகவியலிலும் முன்னேற்றத்தை கொண்டு செல்லலாம் என அவர் தனது உரையில் வலியுறுத்தியுள்ளார். 
மேலும் அவர் உரையாற்றுகையில் நான் பாராளுமன்றம் வந்த முதல் நாளிலேயே அவதானித்திருந்தேன் இந்த பாராளுமன்றில் வயது குறைந்தவர்களில் நான் மிக முக்கியமான ஒருவராக இருப்பேன் என்று நம்புகின்றேன் இந்த பாராளுமன்றத்தில் முதல் நாளிலே சிங்கள தேசியமும் தமிழ் தேசியமும் கருத்துரீதியாக முட்டி மோதிக் கொண்டதை பார்த்திருந்தேன், முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதியாக நான் இவ்விடத்தில் பேசுகின்றேன் முஸ்லிம் தேசியம் எங்கின்ற சிந்தனை கூட மேலெழுப்பாது அது பற்றி பேசாது இந்த தேசம்பற்றிய பற்றோடும் நம்பிக்கையோடும்தான் இந்த நாட்டிலே முஸ்லிம் சமூகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அப்படி இருந்த போதும் கூட இந்த முஸ்லிம் சமூகத்தை இப்போது இந்த நாட்டில் மாத்திரமல்ல உலகத்திலே இஸ்லாமோபியா என்கின்ற ஒரு வகையான வியாதிக்குள் உட்படுத்தி இந்த நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்கள் மீது சந்தேகக் கண்கொண்டு பார்த்து முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை ஒரு கேள்விக்குறியாக்குகின்ற ஓர் அரசியல் சூழ்நிலையை பார்க்கின்றோம் விரிவாக ஆழ்ந்து பார்த்தால் அரசியல் தேவைக்காக உருவாக்கப்பட்ட ஓர் நாடகம் என்பதை என்னால் தைரியமாக சொல்ல முடியும். எனவே இப்படியான ஓர் சூழ்நிலையினை உருவாக்காது இந்த விடயங்கள் மீது கருசனை கொண்டு பார்க்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் என குறிப்பிட்டார்.
இந்த நாட்டின் கிழக்கு மாகாணத்திலே தொல்பொருள் இடங்களை பாதுகாப்பதற்கான ஓர் செயலணி உருவாக்கப்பட்டு அதிலே முற்றுமுழுதாக சிங்கள சகோதரர்கள் இணைக்கப்பட்டது தொடர்பாக ஓர் பாராளுமன்ற உறுப்பினர் பேசினார் அதையும் பேசலாம் என்றுதான் வந்திருந்தேன் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகின்றேன் முஸ்லிம் பிரதிநிதிகள் இந்த நாட்டில் கனிசமான பங்களிப்பை செய்திருக்கிறார்கள் இந்த நாட்டிலே தொல்பொருள் வரலாற்றை நீங்கள் எடுத்துப்பார்த்தால் 1890ல் தொடங்கப்பட்ட தொல்பொருள் வரலாறு 43 வருடங்கள் தொல்பொருள் இரசாயன பகுப்பாய்வு தொடர்பான ஒரு வல்லுனரை கொண்ட சூழ்நிலையிலே முதலாவதாக இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்டவர் கூட ஒரு முஸ்லிம் வல்லுநர் என்பதை ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். எனவே இத்தகையான சூழ்நிலையில் இந்த நாட்டிலே அமைச்சர்களாக இருந்த முஸ்லிம்களினாலயே சீகிரியா போன்ற இடங்கள் பொளத்த கலாசாரம் தொல்பொருள் இடங்களையும் பாதுகாத்திருக்கின்றார்கள் என அமர்வில் வழங்கப்பட்ட உரையின் போதே இவ்வாறு பல விடயங்களை பாராளுமன்ற உறுப்பினர் முதுநபீன்  முகம்மட் முஸாரப் சுட்டிக்காட்டினார்.
எப்படி பார்த்தாலும் இந்த நாட்டை முன்னேற்றுவதற்கு எல்லா துறைகளிலும் முஸ்லிம் மக்கள் தங்களது கனிசமான பங்களிப்பை செய்திருக்கிறார்கள், இந்த நாட்டில் மூன்று இனங்களும் சமமாக மதிக்கப்பட்டு ஒன்றாக சேர்ந்து இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு இந்த பாராளுமன்றில் இருக்கின்ற அத்தனை உறுப்பினர்களும் முன்வர வேண்டும் என வலியுறுத்தியதோடு உரையின் ஆரம்பத்தில் தனக்கு வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றி கூறியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
– சியாத் அகமட்லெப்பை-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

33 Views