நடுக்கடலில் கப்பலொன்றில் தீப்பரவல் காயமடைந்த நிலையில் கடற்படை அதிகாரி மீட்பு
இலங்கை நாட்டின் கிழக்கு கடலில் மசகு எண்ணெய் ஏற்றி வந்த M.T.நிவ் டயமன்ட் என்ற கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
குறித்த கப்பல் இரண்டு இலட்சத்து எழுபதாயிரம் மெற்றிக் டன் மசகு எண்ணெய் உள்ளதாகவும் கடற்பாதுகாப்பு அதிகார சபையின் பொதுமுகாமையாளர் குமார இதனை தெரிவித்தார்.
இந்நிலையில், வான் படைக்கு சொந்தமான பீ.டுவென்டி கண்காணிப்பு படகு குறித்த கடற்பகுதிக்கு அனுப்பப்பட்டு குறித்த கப்பல் மீட்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளதுகுறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை காயமடைந்த நிலையில் கடற்படை அதிகாரி ஒருவர் குறித்த கப்பலில் இருந்து மீட்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.