கோமாரியில் பலத்த காற்றுடன் மழை: மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

 


-சியாத் அகமட்லெப்பை-

பொத்துவில் கோமாரி பகுதியில் இன்று மாலை  காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்ததில் இரண்டு மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளன,

தொடர்ந்து, நீடித்த காற்றின் வேகத்தினால்  குறித்த மரங்கள் விழுந்துள்ளன.

பொத்துவில் இருந்து அக்கறைப்பற்று, மட்டக்களப்புக்கு செல்லும் பிரதான வீதியின் குறுக்கே, விழுந்த மரத்தினால் இரண்டு மணி நேர போக்குவரத்து பாதித்துள்ளதோடு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

சம்பவம் குறித்து கோமாரி பகுதியைச் சேர்ந்த இராணுவத்தினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து. மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி வருகின்றனர். இவர்களோடு  பொத்துவில் பிரதேசசபை தவிசாளர் எம.எஸ்.அப்துல் வாசித் மற்றும் துணைத் தவிசாளர் பி.பார்த்தீபன் அவர்களும் குறித்த சம்பவ இடத்திற்கு விரைந்து மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர் இவர்களோடு பகுதி மக்களும் இணைந்து மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

 இதே வேளை மரம் விழுந்ததில் மின் இணைப்பு கம்பிகள் அறுந்து, மின்தடை ஏற்பட்டுள்ளன தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்கள், துரித கதியில் சீரமைப்பு பணிகளைமேற்கொண்டு வருகின்றனர. 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

38 Views