கொரோனா பரிசோதனை முறையில் புதிய திருப்பம்…வெறும் ஐந்து நிமிடங்களில் அடையாளம்.!! பிரித்தானிய விஞ்ஞானிகள் அசத்தல்.!!

பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஐந்து நிமிடங்களுக்குள் கொரோனா வைரஸை அடையாளம் காணக்கூடிய விரைவான கொரோனா பரிசோதனை சோதனை முறையை உருவாக்கியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.மேலும் 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தயாரிப்பு வளர்ச்சியைத் தொடங்குவதாகவும், ஆறு மாதங்களுக்குப் பின்னர் அங்கீகரிக்கப்பட்ட சாதனம் கிடைக்கும் என்றும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.இந்தப் புதிய கண்டு பிடிப்பு விமான நிலையங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் வெகுஜன சோதனையில் பயன்படுத்தப்படலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் பேராசிரியர் அகில்லெஸ் கபனிடிஸ் கூறுகையில்,இது கொரோனா வைரஸைக் கண்டறிந்து மற்ற வைரஸ்களிலிருந்து அதிக துல்லியத்துடன் வேறுபடுத்த முடியும் என்று தெரிவித்துள்ளார்.அத்துடன் இந்த முறை அப்படியே வைரஸ் துகள்களைக் துல்லியமாக கண்டுபிடிக்கும். இந்த சோதனை எளிமையானது, மிக விரைவானது என்பதோடு, செலவு குறைந்ததாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.கொரோனா வைரஸ் அதிகரித்துச் செல்லும் நிலையில், விரைவான சோதனை முக்கியமாகக் காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

43 Views