கல்வி பொதுதராதர உயர்தரப் பரீட்சைகள் இன்று ஆரம்பமாகின்றது.

 

இந்த ஆண்டுக்கான கல்வி பொதுதராதர உயர்தரப் பரீட்சைகள் இன்று ஆரம்பமாகின்றது. அரசாங்கத்தால் அனைத்து சுகாதார பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகள் வழங்கப்பட்டுள்ளதால் இன்று ஆரம்பமாகவுள்ள கல்வி பொதுத்தரா தர உயர்தரப் பரீட்சைக்காக தமது பிள்ளைகளை அனுப்புமாறு கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் பெற்றோர்களிடம் கோரியுள்ளார்.  கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் 5 ஆம் தர புமைப் பரிசில் பரீட்சை எந்தவொரு சிக்கலும் இன்றி நடாத்த முடிந்துள்ளதால் உயர் தரப் பரீட்சையும் எந்தவித பிரச்சினையின்றி ஆரம்பிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதா அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ள கல்வி பொதுத்தரா தர உயர் தரப்பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதமாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.அனைத்து பரீட்சை நிலையங்களிலும் தொற்றும் நீக்கும் செயற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த முறை கல்வி பொதுத்தராத உயர் தரப்பரீட்சை உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இடம்பெறவுள்ளது. அத்துடன் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களில் 12 விசேட பரீட்சை மத்திய நிலையங்கள் உயர் தர பரீட்சாத்திகளுக்காக அமைக்கப்பட்டுள்ளன. அதேநேரம் தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள மாணவர்களுக்காக அந்த நிலையங்களுக்கு அருகில் பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இன்று ஆரம்பமாகவுள்ள கல்வி பொதுத்தரா தர உயர் தரப்பரீட்சை அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது உயர் தரப்பரீட்சைக்காக 3 லட்சத்து 68 ஆயிரத்து 824 பரீட்சாத்திகள் தோற்றவுள்ளதுடன் அதற்காக 2 ஆயிரத்து 648 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதேவேளை பரீட்சார்த்திகள் பரீட்சை நேரத்திற்கு முன்னதாகவே பரீட்சை நிலையங்களுக்கு சமூகமளிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித கோரிக்கை விடுத்துள்ளார். கொவிட்-19 அச்சம் காரணமாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

</div>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

38 Views