எம்.ரீ நிவ்டயமன் கப்பலின் பொதிகளன் அரையில் இருந்த ஒருவர் உயிரிழப்பு 22 பேர் மீட்பு
தீப்பரவியுள்ள கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்படவில்லை என சமூத்திர சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் இலங்கை கடற்படை மற்றும் விமானப்படையினருடன் இணைந்து கண்கானிப்பில் ஈடுபட்டு
வருவதாக சமூத்திர சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் அதிகார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி டெர்னி பிரதீப்குமார தெரிவித்துள்ளார்.
இதேவேளை தீப்பரவிய கப்பலில் இருந்து இன்று காலை இரண்டு வெடிப்புக்கள் பதிவாகியுள்ளன இதன் காரணமாக கப்பலின் சமநிலை மாறிவருவதாகவும் கலாநிதி டெர்னி பிரதீப்குமார தெரிவித்துள்ளார்.
இதேவேளை எம்.ரீ நிவ்டயமன் கப்பலின் பொதிகளன் அரையில் இருந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்
குறித்த கப்பலின் அலுவலகரின் வாக்கு மூலத்திற்கு அமைய இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் இந்திக டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
கப்பலில் பணியாற்றிய 22 பேர் இதுவரை பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் அதில் ஒருவர் சிகிச்சை பெறுவதற்காக மல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் ஏனையோர் தீயை கட்டுப்படுத்தும் வகையில் இலங்கை கடற்படையினருடன் இணைந்து செயற்பட்டு வருவதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தீயை கட்டுப்படுத்துவதற்கு 8 கப்பல்கள் பயண்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்