உரிய தருணங்களில், சரியான முடிவுகளை தயக்கமின்றி துணிந்து எடுப்பவர்களுக்கு எனது முழு ஆதரவு எப்போதும் இருக்கும். ஜனாதிபதி

 

உரிய தருணங்களில், சரியான முடிவுகளை தயக்கமின்றி துணிந்து எடுப்பவர்களுக்கு எனது முழு ஆதரவு எப்போதும் இருக்கும். அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு கடமைகளை ஒப்படைத்து உரையாற்றிய போதே ஜானாதிபதி கோட்டாப்ப ராஜபக்ச  இவ்வாறு குறிப்பிட்டார்

“சட்டம் எவ்வாறானதாக ஆக்கப்பட்டிருந்தாலும், அரசமைப்பு எப்படியானதாக உருவாக்கப்பட்டிருந்தாலும் – நீங்கள் சரியானதைச் செய்கின்றீர்கள் எனின், அதற்கான முடிவுகளைத் துணிந்து எடுக்க அச்சமடைய வேண்டாம்; நேர்மையான ஒரு  முடிவு ஒருபோதுமே தவறாகப் போய் முடிந்துவிட முடியாது.


ஒர் அமைச்சின்  செயலாளராக – நெருக்கடியான ஓரு சூழ்நிலையில், எமது நாட்டிற்கான சரியான முடிவுகளை நான் தற்துணிவோடு எடுத்திருந்தேன். பின்னர், நான் நீதிமன்றம் வரை கூட கொண்டுசெல்லப்பட்டேன். இப்போது, இறுதியாக, நான் எமது நாட்டின் ஜனாதிபதியாகவே ஆகிவிட்டேன்.

சரியான முடிவுகளை நாம் எடுத்தால், எமது இலக்குகள் தவறிவிடுவது இல்லை; அதுவே இயற்கையானதும் என்றுதான் நான் நம்புகிறேன். தவறான முடிவுகளை எடுப்பதுவே, தொடர்ச்சியான தவறுகளுக்கும் வழிவகுத்துவிடும்.

உரிய தருணங்களில், சரியான முடிவுகளை தயக்கமின்றி துணிந்து எடுப்பவர்களுக்கு எனது முழு ஆதரவு எப்போதும் இருக்கும்.

உங்கள் பொறுப்புக்களுக்குச் சரியானதை – நேர்மையாக – உங்கள் மனச்சாட்சிக்கு விரோதமின்றி நீங்கள் செய்ய வேண்டும். உங்கள் கடமைகளை செவ்வனே நிறைவேற்றும் பொருட்டு இப்போது உரிய முடிவுகளைத் தற்துணிவோடு எடுத்ததையிட்டு பின்பொரு நாளில், நீங்கள் நிச்சயமாக பெருமை கொள்வீர்கள், என்னைப் போலவே.”

அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு கடமைகளை ஒப்படைத்து உரையாற்றிய போதே ஜானாதிபதி கோட்டாப்ப ராஜபக்ச  இவ்வாறு குறிப்பிட்டார்.

-ஊடகப்பிரிவு-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

29 Views