உங்கள் விரல் நகத்தின் வடிவத்தை வைத்தே குணத்தை சொல்லலாம்- ஈஸியாக தெரிஞ்சுக்க இதோ டிப்ஸ்..!

விரல் நகம் சிலருக்கு அழகாகவும், சிலருக்கு அசிங்கமாகவும் இருக்கும். ஆனால் இந்த நகத்தின் அமைப்பை வைத்தே நம் குணத்தை தெரிந்துகொள்ளலாம். இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

அகலவடிவ நகம்..

நீளமாகவும், அகலமாகவும் உங்கள் நகம் இருந்தால் இயல்பிலேயே உங்களிடம் தலைமைப்பண்பு இருக்கும். நீங்கள் கொடுக்கும் வாக்குக்கு அதிக மதிப்பும் இருக்கும். செயலலில் கவனமும், பொறுமையும் இருக்கும். சமநிலையுடன் கூடிய வாழ்வை நீங்கள் வாழ்வீர்கள்.

கூர்மையான வடிவில் நகம்..

இவர்கள் ஆடம்பர வாழ்வை விரும்புவார்கள். சீக்கிரமே எரிச்சல் அடைவார்கள். எப்போதும் எல்லா விசயங்களிலும் தனக்கு முதல்மரியாதை கிடைக்கவேண்டும் எனவும் நினைப்பார்கள்.

சிறிய சதுரவடிவில் நகம்..

சமயோகித எண்ணம் இவர்களிடம் அதிகம். இவர்கள் எதற்கும் வளைந்துகொடுக்காத திறமைசாலிகளாகவும் இருப்பார்கள். இவர்களுக்கு கூர்மதி இருக்கும். எல்லா வேலையையும் கற்று சீக்கிரம் செயல்படுத்துவார்கள்.

குட்டையான வடிவில் நகம்..

இவர்கள் யார் என மைண்ட் சலவை செய்தாலும் மாறாத நச் நபர். இவர்களது வழிப்பாதையில் அதிக சிரமங்கள் இருக்கும். அதற்கு இவர்களின் குணநலனே காரணம். இவர்களுக்கு அடிக்கடி கோபம்வரும். பொறுமையே இல்லாதவர்கள் இவர்கள்

பாதாம் வடிவ நகம்..

இவர்களது நகம் பாதாம் அல்லது வெண்ணெய்ப்பழம் போன்ற வடிவில் இருந்தால் இயல்பாகவே மென்மையான மனம் கொண்டவர்கள். இவர்களுக்கு சின்ன வார்த்தை கூட புண்பட வைக்கும். மற்றவர்களுக்கு உதவுவடு, அன்பைப் பரிமாறுவது இவர்களது குணமாகும்.

முக்கோணம் வடிவ நகம்

விரல்நகம் முக்கோணம் வடிவில் இருந்தால் அவர்களுக்கு தோல்வியே இருக்காது. இவர்கள் எப்போதும் புகழுடன் இருக்கவும், மற்றவர்கள் மத்தியில் முதன்மையானவராக இருக்கவும் விரும்புவார்கள். இவர்கள் அடிக்கடி தங்கள் மனதையும் மாற்றிக்கொண்டே இருப்பார்கள்.

The post உங்கள் விரல் நகத்தின் வடிவத்தை வைத்தே குணத்தை சொல்லலாம்- ஈஸியாக தெரிஞ்சுக்க இதோ டிப்ஸ்..! appeared first on Leading Tamil News Website.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

80 Views