ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களில் கோரோனா பாதித்தோர் எண்ணிக்கை 101ஆக உயர்வு

மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய பணியாளர்களில் மேலும் 13 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்றிரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் 101 பேருக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் – புங்குடுதீவைச் சேர்ந்தவர்.
நாட்டில் இன்றுவரை கோவிட்- 19 தொற்று நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 513ஆக அதிகரித்துள்ளது.
திவுலுபிட்டிய பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் மற்றும் அவருடைய மகள் கோரோனா தொற்றுக்கு உள்ளாகியமை நேற்று ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டதை அடுத்து அந்தப் பெண்ணின் தொழிற்சாலை பணியாளர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றது.
The post ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களில் கோரோனா பாதித்தோர் எண்ணிக்கை 101ஆக உயர்வு appeared first on Vakeesam.